- சுமதி சிவக்குமார்
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தமிழ் சங்கமும் அறம் செய விரும்பு கல்வி மற்றும் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய மாபெரும் ஹைக்கூ திருவிழா நேற்று நைனார்பாளையம் ரோட்டில் உள்ள அரிசி ஆலை அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்திறப்பு விழா, இனிக்கும் காற்று என்ற நூல் வெளியீட்டு விழா மற்றும் ஹைக்கூ கவிஞர்களுக்கு விருது வழங்கும் விழா என மாபெரும் ஹைக்கூ திருவிழாவாக கொண்டாடினர்.
இவ்விழாவில் கள்ளக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. தர்மராஜா தலைமை தாங்கினார்.

கவிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரையும் துவக்க உரையை தமிழ்த்துறைத் தலைவர் ம. மோட்ச ஆனந்தன் நோக்கவுரையை சின்னசேலம் தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் கவிதை தம்பியும் தமிழ்ச்சங்க காப்பாளர்கள் அருணா தொல்காப்பியன் , மு. அசோகன், மு. செந்தில்குமார், செயலாளர் இல. அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை உரையும் நிகழ்த்தினர்.
பண்டித ஜவஹர்லால் நேரு படத்தை மரு. பொன். க. இரத்தின வேலு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் இனிக்கும் காற்று என்ற ஹைக்கூ நூலை அதன் ஆசிரியர் மு. முருகன் வெளியிட்டார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வாளர் வாசுதேவன் இநநூலை திறனாய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்களுக்கு கவிச்சுடர் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கவிஞர்கள் முகம் பதித்த விருது ஷீல்ட், கவிஞர்கள் முகம் பதித்த விருது சான்றிதழ், தலைப்பாகை, முத்துமாலை, பொற்கிழி, பொன்னாடை என இவ்விருதில் கவிஞர்களுக்கு அளிக்கப்பட்டது.
வாழ்த்துரை கவிஞர் கோபால கிருஷ்ண, இரா. வெற்றி வேல் , பெ. கண்ணன் வழங்கினர். விழாவில் கவிஞர்கள் ஆசிரியர்கள் மற்றும் தமிழார்வர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ச்சங்க பொருளாளர் நடராஜன் நன்றி கூறி விழா இனிதே நிறைவு பெற்றது.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
{{comments.comment}}