சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. அக்டோபர் 28ம் தேதி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் குடும்பத்துடன் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பிரபலமானது ஹாலோவீன் விழா. இந்த விழாவை, சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் அக்டோபர் 28ம் தேதி நாள் முழுவதும் கொண்டாடவுள்ளனர்.
அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமைந்துள்ள அமெரிக்க மையத்தில் அக்டோபர் 28, சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ள ஹாலோவீன் கொண்டாட்டத்தில் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.
ஹாலோவீன் என்பது அமெரிக்கா முழுவதும் உள்ள சமூகங்கள் கொண்டாடும் ஒரு பாரம்பரிய விழா ஆகும். குடும்பத்துடன் கொண்டாடப்படும் இந்த விடுமுறையின் போது வீடுகள் மற்றும் புல்வெளிகள் செதுக்கப்பட்ட பூசணிக்காய்கள் மற்றும் வேடிக்கையான பொருட்கள் கொண்டு அலங்கரிக்கப்படும். மிட்டாய் உள்ளிட்ட இனிப்பு வகைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
ஹாலோவீன் என்பது அச்சமூட்டும் திரைப்படங்கள் மற்றும் பயமுறுத்தும் விளையாட்டுகளால் ஆனது மட்டுமல்ல, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மாயாஜால கற்பனைகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குடும்ப மற்றும் சமூக கொண்டாட்டமும் ஆகும். ஹாலோவீனின் மகிழ்ச்சியைப் பரப்புவதற்காக, சென்னையில் உள்ள அமெரிக்க மையம் வரும் சனிக்கிழமை அன்று நாள் முழுவதும் வேடிக்கை நிறைந்த நிகழ்ச்சிகளை நடத்தும்.
உங்களுக்குப் பிடித்தமான கதாபாத்திரம் போல் உடையணிந்து, ஹாலோவீன் தொடர்பான பல செயல்பாடுகளில் நீங்கள் பங்கேற்கலாம். காலை 10:30 மணிக்கு உங்கள் ட்ரிக்-ஆர்-ட்ரீட் பைகளை நீங்களே உருவாக்குவதற்கான செயல்விளக்கம் அளிக்கப்பட உள்ளது, காலை 11:00 மணிக்கு எஸ்கேப் ரூம் சாகசமும், நண்பகல் 12 மணிக்கு ஹாலோவீன் தொடர்பான திரைப்படக் காட்சியும் மற்றும் மதியம் 2:30 மணிக்கு கதை கூறல் (3 முதல் 9 வயது வரை) நிகழ்ச்சியும் நடைபெறும்.
ஹாலோவீன் தொடர்பான சுவாரசியமான பொருட்களை நாள் முழுவதும் நீங்கள் 3டி-ப்ரிண்ட் செய்யலாம். அமெரிக்க மையத்தின் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படித்து மகிழலாம்.
இதுகுறித்து அமெரிக்க துணைத் தூதரகத்தின் பொதுமக்கள் உறவு மற்றும் கலாச்சார விவகாரங்கள் அதிகாரி ஸ்காட் ஹார்ட்மேன் கூறுகையில், “ஹாலோவீன் என்பது அச்சுறுத்தும் மற்றும் பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியது என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அமெரிக்காவில் குழந்தைகள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் மிகவும் விரும்பப்படும் விடுமுறை நாட்களில் ஒன்றாக ஹாலோவீன் திகழ்கிறது.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து படைப்பாற்றலையும், நமது கற்பனைகளையும் தாராளமாக வெளிப்படுத்துவதற்கும், குழந்தைகளுக்கு நல்ல வேடிக்கையான அனுபவத்தை வழங்குவதற்குமான நேரம் இதுவாகும் என்றார்.
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?
டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!
{{comments.comment}}