- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
ஒரு ஊரில் ஒரு அப்பா அம்மா. அவர்களுக்கு 3 குழந்தைகள். அவர்களின் குடும்பம் அன்றாட வேலை செய்து வாழ்ந்து வந்தனர். மூத்த மகள் ஓரளவு நன்றாக படிப்பாள்.
இரண்டாவது மகள் நன்றாக வாய் பேசும் கெட்டிக்காரி. மூன்றாவது மகன் மிகவும் சுறுசுறுப்பாக சேட்டைகள் செய்வான். இவர்களது குடும்பம் கிழங்கு வாங்கி விற்றனர்.
பின் ஒரு தோட்டத்தின் கிழங்குகள் அனைத்தையும் விலைபேசி மற்றவர்களுக்கு விற்கும் பெரு வியாபாரியாக மாறினர். ஒரு உறவுக்கார் நிலம் குத்தகைக்கு விடுவது தெரிய வந்தது.
அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் காக்கரட்டான்( காட்டு மல்லி) பூச்செடிகளை நட்டு விவசாய வேலைகள் செய்தனர்.

அந்த நிலத்தில் அதிக புற்கள் இருப்பதைக் கண்டு இதில் பூச்செடிகள் நட்டு பூ பறித்து விடுவீர்களா? என்று பலர் ஏளனம் செய்தனர்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல் களைச் செடிகளை வெட்டி நிலத்தை பக்குவப்படுத்தி இயற்கை சாண உரமிட்டு பூச்செடிகளில் அதிகமாக பூக்கள் பூத்தன. அதற்கு நல்ல விலையும் கிடைத்தது.
ஒட்டுமொத்த குடும்பத்தின் முயற்சியால் நல்ல வருமானம் கிடைத்தது. இதைப் பார்த்து கேலி செய்தவர்கள் தன் தவறுக்காக வருத்தம் தெரிவித்தனர்.
காலம் உருண்டோடியது. கிழங்கு வியாபாரி புஷ்ப கமிஷன் கடை வைக்கும் அளவுக்கு உயர்ந்த நிலையை அடைந்தார். மூத்தமகள் ஆசிரியர் ஆனாள். இளைய மகள் செவிலியர் ஆனாள்.
கடைசி மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முதல் பட்டதாரி ஆனார். படிக்காத அப்பா அம்மா இருவரும் தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைத்த கனவுகள் இன்று நனவானது.
படிக்காத ஏழைப் பெற்றோர் தன் கடின உழைப்பாலும், முயற்சியாலும் படித்து அரசு அதிகாரிகளாக இருப்பவர்களே ஆச்சர்யமாக பார்க்கும் அளவுக்கு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தனர்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)
உள்ளாட்சி தேர்தலில் வென்றால் ஆட்சியை பிடிக்கலாம்: இபிஎஸ் ஆருடம்
ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு
முதல்வர் விஜய் கரூர் செல்லவும் தடை இல்லை.. பேசவும் தடையில்லை.. திமுகவின் கோரிக்கைகள் நிராகரிப்பு!
'காக்ரோச் ஜனதா கட்சி'யின் எக்ஸ்தள பக்க முடக்கத்தை நீக்க கோர்ட் அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைனில் பத்திரப்பதிவு: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிப்பு!
எங்கள் கேப்டன் கூல்...தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் விஜய்
சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனுத் தாக்கல்!
கேரளா வயநாட்டில் நிலச்சரிவு: சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் பயங்கரம்
குஜராத்தில்.. 30 நிமிடங்களாக இளைஞரை தரையில் அழுத்திப் பிடித்த சிங்கம் - பதறவைக்கும் வீடியோ
{{comments.comment}}