ஹரியானா: உடல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து ஹரியானாவை சேர்ந்த அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான வெகுமதி அளித்து மரியாதை வழங்கப்படும் என அம்மாநில அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஹரியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். 29 வயதான வினேஷ் போகத், காமன்வெல்த் விளையாட்டில் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்தவர். சாதனை வீராங்கனையான வினேஷ் போகத், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரான பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய வீராங்கனைகளுக்கு ஆதரவா களம் குதித்து போராடியவர், தெருவோரத்தில் படுத்துத் தூங்கி போராட்டம் நடத்தியவர்.
இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்ற நிலையில் உடல் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். இந்த பின்னணியில் மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக அவர் ஓய்வு முடிவை வலியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களிடயே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில் வினேஷ் போகத்துக்கு ஆதரவு அளித்துள்ள ஹரியானா அரசு அவரை உரிய முறையில் கெளரவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வென்றவருக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு மரியாதை தரப்படும். ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத்துக்கு மரியாதை, வெகுமதி, அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}