இது சும்மா.. டிரைலர் தாம்மா.. 5 நாட்களுக்கு.. தமிழகத்தில் 106 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்குமாம்!

Apr 02, 2024,06:05 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எப்போதுமே ஏப்ரல், மே மாதங்களில்  தான் வெயில் அதிகரிக்க ஆரம்பிக்கும்.ஆனால் தற்போது மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க ஆரம்பித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எந்த அளவிற்கு இயற்கை நமக்கு மழையால் தண்ணீரை அதிகம் கொடுத்ததோ.. அந்த  தண்ணீரை உறிஞ்சும் அளவிற்கு வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் அனல் காற்று வீசுகிறது. மதிய வேளைகளில்  வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல்,மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது சும்மா ட்ரெய்லர் தாம்மா.. மெயின் பிக்சர் நீ இன்னும் பார்க்கல.. என சொல்வது போல,  தற்போது இருக்கும் வெப்பநிலையை விட அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் 36 - 37 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்க கூடுமாம்.



இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து  நாட்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்குமாம். அதிகபட்சமாக வட தமிழக, உள் மாவட்டங்களில் ஓர் இடங்களில் 102 முதல் 106 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துமாம். அதே நேரத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில்  சமவெளி பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் குறையுமாம். அப்போது  ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் காலத்தில் முடிந்தவரை மக்கள் வெளியே செல்வதை தவிருங்கள். கண்டிப்பாக வெளியே செல்லும் நிலை ஏற்பட்டால் கவனமுடன் வெளியே செல்லுங்கள். வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் அதிகமான தண்ணீரை பருகுங்கள். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நம் உடலில் வறட்சியை நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும். இது தவிர எண்ணெய் உணவுகளை தவிர்த்து, நீர் சத்து மிகுந்த பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் நம் உடலில் கடினமான ஆடைகளை அணியாமல் இலகுவான லேசான பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

வெயில் காலம் தானே.. இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்.. என்று அசட்டுத்தனமாக நினைக்காதீர்கள். இது நம் உடலில் உள்ள நீர்சத்தை உறிஞ்சி அதிக சூட்டை ஏற்படுத்தும். இதனால் பல விதமான நோய்கள் உருவாக்கும். அதனால் கவனமாக இருங்க.

சமீபத்திய செய்திகள்

news

Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்