சென்னை: உள்புற தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யும் என்று ஆறுதல் செய்தியைச் சொல்லியிருந்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தற்போது ஒரு பேட் நியூஸைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் வடக்கு உட்புற மாவட்டங்களில் வெப்ப நிலை உச்சத்தைத் தொடப் போவதாக அவர் எச்சரித்துள்ளார். இதனால் மக்களிடையே அயர்ச்சி உருவாகியுள்ளது.
இந்த முறை கோடைகாலம் மிகக் கொடுமையாக இருக்கிறது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. கடுமையான ஹீட்டால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அனல் பறக்க வெயில் அடித்து வருகிறது. பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் ஓடிக் கொண்டிருக்கிறது.
மே 4ம் தேதி அக்னிநட்சத்திர வெயிலும் தொடங்கவுள்ளது. 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பேட் நியூஸ் என்று கூறி வெப்ப அலை வீச்சு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான். இதுகுறித்து அவர் கூறுகையில், மே 1ம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வடக்கு உட்புற மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் பெல்ட் பகுதிகளில் வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், மே 5ம் தேதி முதல் உட்புற தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வெதர்மேன் கூறியுள்ளார். வெப்ப அலை உச்சத்தைத் தொடும் என்று கூறப்பட்டிருப்பதால் கடும் வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் மக்கள் பீதி அடையாமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இதிலிருந்து தப்ப முடியும் என்பதால் பயப்படாமல் இருக்கவும்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}