கொட்டி தீர்க்க ரெடியாகிறது கன மழை.. 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Oct 30, 2023,04:26 PM IST

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 4ம் தேதி வரை மழை உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், வீட்டை விட்டு வெளியில்  செல்லும் மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக குடையை எடுத்துச் செல்லுங்கள். 


இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




அக்டோபர் 31ம் தேதி ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நவம்பர் 1 முதல் 4ம் தேதி வரை  வட மற்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். குறிப்பாக, மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்