மதுரையில் வெளுத்து வாங்கிய கன மழை.. வைகையில் வெள்ளப் பெருக்கு.. போக்குவரத்து பாதிப்பு

Oct 14, 2024,10:24 PM IST

மதுரை : தொடர் மழை காரணமாக மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்திலும், வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றில் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றிலும் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடி வந்த நிலையில், தற்போது கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் கீழ் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளது.




இப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு வைகை ஆற்றின் குறுக்கே நடைபெற்று வந்த கோரிப்பாளையம் மேம்பால பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைகள் களைகட்டி உள்ள நேரத்தில் மதுரையில் கனமழை பெய்து வருவதால் மதுரை மக்கள் கவலை அடைந்துள்ளனர். பல ஊர்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.


கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெய்த மழையால் அங்கு சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இப்போதே இப்படி என்றால் இனி போகப் போக எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்