மழைன்னா பெய்யும்... ஆனால் இப்படி பேயாய் மாறி வச்சு செய்யுதே... தென்கொரியாவில்!

Jul 16, 2023,10:16 AM IST
- சகாய தேவி

சியோல்:  தென் கொரியாவில் காட்டு காட்டு என காட்டிக் கொண்டிருக்கிறது மழை. வெளுத்து வாங்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை இந்தியாவில் தென் மேற்குப் பருவ மழை வித்தியாசமாக பெய்து வருகிறது. வழக்கமாக கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளுத்து வாங்கும். ஆனால் அங்கு பெரியஅளவில் மழை இல்லை. இடையில் கொஞ்சம் வெளுத்தெடுத்தது அவ்வளவுதான். தற்போது வட மாநிலங்களை பிரித்தெடுத்துக் கொண்டிருக்கிறது.

டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம் போன்ற வட மாநிலங்கள் பெரிய மழையையும் வெள்ளத்தையும் சந்தித்து வருகின்றன. உள்ளூரில் தான் இப்படி என்றால் வெளிநாட்டில், தென் கொரியாவில் இடைவிடாத கனமழையால் பேரழிவு தரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனராம்.




தென் கொரியாவில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  10 பேரைக் காணவில்லை. தற்போது அங்கு கோடைகாலம்தான். ஆனால் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான உயிரிழப்புகள் நிலச்சரிவுகள் அல்லது வெள்ள  நீரால் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்டவைதான்.

நீரில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க மீட்புக் குழுக்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாக  உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வடக்கு சுங்சியோங் மாகாணம் தான் வெள்ளத்தால் கடும் பாதிப்பைசந்தித்துள்ளது. அங்குள்ள சியோங்ஜு நகரில் 430 மீட்டர் நிலத்தடி சுரங்கப்பாதையில் சிக்கிய சுமார் 15 கார்களை மீட்க பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

சனிக்கிழமை காலை இந்த சுரங்கப் பாதை வெள்ளத்தில் மூழ்கி விட்டது. எனவே அதற்குள் சிக்கிய கார்களுக்குள் இருந்தவர்கள் நிச்சயம் உயிரோடு இருக்க முடியாது என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை இறந்தவர்களில்  17 பேர் மற்றும் காணாமல் போனவர்களில் ஒன்பது பேர் உட்பட -- பெரும்பான்மையான உயிரிழப்புகள் வடக்கு கியோங்சாங் மாகாணத்தில்தான் நடந்துள்ளது. பெரும்பாலும் மலைப் பகுதியில் பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளோடு மூழ்கி இறந்துள்ளனர்.  வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில், சிலர் அடித்துச் செல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இதற்கிடையே,தென் கொரியா வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை வரை அதிக மழை பெய்யும். மேலும் "கடுமையான" ஆபத்துகளுக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

வழக்கமாகவே தென் கொரியாவில் கோடை மழைக் காலத்தில் வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும். கடந்த ஆண்டும் கூட இதேபோல வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தை சந்தித்தது, இதில் 11 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

அதிகம் பார்க்கும் செய்திகள்