சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்த வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் அதிகளவில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் மக்கள் பகல் நேரங்களில் வெயில் வர தயக்கம் காண்பித்து வருகின்றனர். வெயிலை தாங்கிக் கொண்டு வெளியில் வரும் பொதுமக்கள் பல விதமான உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திரத்திற்கு முன்னரே வெயில் கடுமையாக இருந்த நிலையில், தற்போது அக்னி நட்சத்திரம் வேறு ஆரம்பித்துள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், கடும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் பொருட்டு தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்களையும், பூமியையும் வர்ண பகவான் குளிர்வித்து வருகின்றார்.
இந்நிலையில், வெயிலின் தாக்கம் சற்று குறைவதுடன் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும், பலத்த காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 43.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 43.2 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையம் 42.7 டிகிரி செல்சியஸ், மதுரை விமான நிலையம் 42. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வேலூரில் 42.6, திருத்தணி 41.6, திருப்பத்தூர் 41.4, பாளையங்கோட்டை 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை மீனம்பாக்கத்தில் 39.1, நுங்கம்பாக்கத்தில் 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை எதிர்பார்க்கலாம்.
ஒன்பதாம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .
தமிழ்நாட்டில் 11 ஆம் தேதிக்குப் பிறகு நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறைய கூடும். ஏழாம் தேதி முதல் பதினோராம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
{{comments.comment}}