செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

Jul 30, 2026,01:29 PM IST

சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள், விசாரணைகள் அதிகரித்து வருகிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான அரசின் நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றமான நிலை தமிழக அரசியலிலும், திமுக வட்டாரத்திலும் நிலவுகிறது.


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கு, மின்சார துறையில் மின் மாற்றிகள் அமைப்பதில் முறைகேடு வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்து வருகின்றன. 


போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி 500 நாட்களுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு உச்ச நீதிமன்றம் வரை சென்று, கடுமையான சட்ட போராட்டம் நடத்தி தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.


குதிரை பேர வழக்கு




இதற்கிடையில் மின்சாரத்துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரிக்க தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், தவெக அரசை கவிழ்ப்பதற்காக தவெக எம்எல்ஏ.,விடம் குதிரை பேரம் நடத்தியதாக செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது. 


இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி, பிறகு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கும் அளவிற்கு சென்றது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த வழக்கில் சமீபத்தில் தான், செந்தில் பாலாஜி முன்ஜாமீன் பெற்றார். அதுவும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் நேரில் வந்து ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையின் அடிப்படையில் தான் சென்னை ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது.


ஆனால் முன்ஜாமீன் கிடைத்த பிறகு, வழக்கின் எஃப்ஐஆரில் தனது பெயரில் இல்லை என்பதால் தான் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அவசியமில்லை என செந்தில் பாலாஜி கூறி வந்தார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையும், போலீசாரும் மீண்டும் கோர்ட்டில் அனுகுவதற்கு குறித்து ஆலோசித்து வந்தனர்.


இந்த நிலையில் தான் டாஸ்மாக்கில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 41 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். டாஸ்மாக் குடோன்கள், தொழிற்சாலைகள், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.


டாஸ்மாக் முறைகேடு


டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சென்னையில் வைத்து செந்தில் பாலாஜியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். பிறகு செந்தில் பாலாஜியிடம் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி, அவர் மீது வழக்கும் பதிவு செய்தனர். நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உடனடியாக முன்ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்தது. 


முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டதற்கும் ஆதாரங்கள் உள்ளன; குற்றம்சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளது. செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளது என டாஸ்மாக் மதுபான முறைகேடு வழக்கில் செந்தில்பாலாஜியின் முன்ஜாமீன்  மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கருத்து தெரிவித்துள்ளார்.


நீதிபதியே இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் செந்தில் பாலாஜி, இந்த வழக்கில் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை டாஸ்மாக் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, செந்தில் பாலாஜியை கைது செய்தால், தவெக எம்எல்ஏ.,விடம் பேரம் பேசிய வழக்கிலும் அவரது முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. 


திமுக.,வினர் மீது அடுத்தடுத்து வழக்கு :




அடுத்தடுத்த வழக்குகள், விசாரணை என லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணை வளையத்திற்குள் திமுக.,வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் செந்தில் பாலாஜி கொண்டு வரப்பட்டுள்ளது திமுக.,வில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே திமுக.,வின் எ.வ.வேலு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வரை மிரட்டும் வகையில் பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படி அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் முக்கிய இலக்கியப் படைப்புகள்!

news

சிவனே போற்றி! அரனே போற்றி!

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

சிந்தனைச் சிதறல்.. கொய்யா மரங்களிடமிருந்து மாங்கனிகளை எதிர்பார்க்கலாமா?

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

"As you think, you feel. As you feel, you radiate. As you radiate, you create."

அதிகம் பார்க்கும் செய்திகள்