6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்

Jun 12, 2025,05:57 PM IST
சென்னை: நீலகிரி. கோயம்புத்தூர்,தேனி , தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை படிப்படியாக தீவிரமடைந்து வருவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி. கோயம்புத்தூர்,தேனி , தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலம் மேலடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இது தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதியில் நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 14ம் தேதி அதிக கனமழை பெய்யும் இடங்கள்:



நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வரும் 14ம் தேதி முதல் கன முதல் அதி கனமழையும், கோயமுத்தூர்,திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 15ம் தேதி அதிக கனமழை பெய்யும் இடங்கள்:

அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வரும் 15ம் தேதி கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் மழை பகுதிகள், தேனி, தென்காசி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கள் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

இரண்டெழுத்து மந்திரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்