மும்பை: மும்பையில் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்து வருவதால் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பையில் மட்டும் ஒரே நாளில் 30 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த கனமைழ காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் சாய்ந்துள்ளன. மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, செம்பூர், பிடி மெல்லோ ரோடு, ஏபிஎம்சி மார்க்கெட், டர்பே மாஃப்கோ மார்க்கெட், கிங்ஸ் சர்க்கிள் போன்ற பகுதிகளில் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சூழல் காரணமாக வடக்கு ஆந்திர கடலோர பகுதி, கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மாஹே, ஏனாம், கர்நாடகாவின் உள்ள முக்கிய பகுதிகளிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}