மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Nov 09, 2024,03:10 PM IST
 கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு, இ பாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இரு ஊர்களின் நுழைவாயிலிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் அனைவரும் விரும்பப்படும் ரசிக்கப்படும் ஒரு கோடை வாசத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதனால் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் தமிழ்நாடு மற்றும் பிற பகுதிகளில் இருந்து மக்கள் சாரை சாரையாக கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். 



குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே தொடர் விடுமுறை நாட்களில்  சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதால் கொடைக்கானல் முழுவதும் கூட்ட நெரிசலால் போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனை முறைப்படுத்தும் நோக்கில் இ பாஸ்  கொண்டுவரப்பட்டு, ஏற்கனவே இ_பாஸ் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இ பாஸ் முறை குறித்து நேற்று உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஊட்டி, கொடைக்கானலுக்கு இபாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் . அதேபோல் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானல் கடும் கூட்டம்

இந்த நிலையில் இன்று கொடைக்கானல் நுழைவாயிலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, இபாஸ் பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து பெருமாள் சாலைப் பகுதி வரைக்கும் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தற்போது வார விடுமுறை என்பதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றமும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூபாய் 20 வீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. எனவே இன்று முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் ரூபாய் 20 அவதாரம் விதிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு

news

திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!

news

3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!

news

Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!

news

கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?

news

ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!

news

திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?

news

Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!

அதிகம் பார்க்கும் செய்திகள்