சென்னை: போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பணி நிமித்தம் காரணமாக பிற பகுதிகளில் இருந்தும் மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவும் அத்தியாவசிய தேவைக்காகவும் போக்குவரத்து சேவை மிகவும் இன்றியமையாததாக திகழ்வதால் வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக கிளாபாக்கம் பஸ் நிலையம் வந்தது முதல் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனை சமாளிக்க அரசு அவ்வப்போது பல்வேறு திட்டங்களையும் வகுத்து அதனை செயல்படுத்தியும் வருகிறது. அதே சமயம் மக்கள் சிரமம் இல்லாமல் பயணிக்க ரயில், மெட்ரோ ரயில், பஸ்கள், போன்றவற்றை கூடுதலாகவும் இயக்கி வருகிறது. இருப்பினும் பல்வேறு மேம்பால பணிகள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் வருகிறது.
இந்த போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவில் அணிவகுத்து நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே கனரக வாகனங்கள் செல்வதால் பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது.
குறிப்பாக தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்டலூர்- கேளம்பாக்கம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதிகளில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அதிகளவில் உள்ளன. மக்கள் அதிக அளவு சென்று வரும் பகுதியாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் பள்ளி கல்லூரி மாணவிகள் செல்வதற்கும், போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் என தாம்பரம் மாநகர காவல்துறை ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்படி வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}