கிளியோ மயிலோ.. அனுமதி இல்லாமல் வளர்த்தால்.. ரூ. 10,000 அபராதம்.. அதுக்கும் லைசன்ஸ் வாங்கணும்!

May 20, 2024,05:26 PM IST

சென்னை: வீடுகளில் கிளி, மயில் போன்றவற்றை அனுமதியின்றி வளர்த்தால் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாய்கள் வளர்க்க உரிமம் பெறுவது போல் இனி பறவைகளுக்கும் உரிய முறையில் உரிமம் வாங்க வேண்டும் என்றும் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கிளி மட்டும் அல்ல எந்த வகையான பறவைகளையும் வீடுகளில் வளர்க்க கூடாது, விற்பனையும் செய்யக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 1990 மற்றும் 1991ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச உடன்பாடு அடிப்படையில் , கிளிகளை வளர்ப்பதற்கு மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், இன்னமும் நிறை பேர் கிளிகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். 




வீடுகளில் செல்லப் பிராணிகளை வணிக நோக்கில் வளர்த்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நம்முடைய நாட்டில் 1,364 வகையான பறவைகள் காணப்படுகின்றன. இதில் 194 வகை பறவை இனங்கள் உலக அளவில் அழியும் நிலையில் இருக்கிறதாம். இப்படி அழியும் நிலையில் உள்ள பறவைகளை பாதுகாப்பதற்காகவே மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது.


மேலும், வெளிநாடுகளில் இருந்து பறவைகளை கொண்டு வந்து இந்தியாவில் வளர்ப்பவர்கள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. இதற்காக வசதிகள் இணையதளத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. பறவைகளை வீடுகளில் வளர்ப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பறவைகளை வளர்ப்போர் குறிப்பாக வீடுகளில் பறவைகளை வளர்ப்போர் உணவு, தண்ணீர் , இடவசதிகள் இருக்கின்றனவா என அதில் கேட்கப்பட்டுள்ளன. 


சட்டப்படி அனுமதிக்கப்படும் சில வகை பறவைகளை மட்டுமே வீடுகளில் வளர்க்க வேண்டும் அப்படியே வளர்த்தாலும், அந்த பறவைகள் குறித்த விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன்படி கிளி மற்றும் மயில் போன்ற பறவைகளை வளர்ப்போர் உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும். பதிவின் அடிப்படையில் அவர்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கப்படும். பறவைகளின் கால்களில் மாட்டுவதற்கான வளையங்கள் வழங்கப்படும். இதன் மூலம் பறவைகள் அடையாளம் காணப்படுமாம். 


இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 மும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்