கொடைக்கானல் இ -பாஸ் தொடர்பான சந்தேகமா?.. இந்த நம்பருக்கு அடிச்சு கிளியர் பண்ணிக்குங்க!

May 07, 2024,05:19 PM IST

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இபாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், இது தொடர்பான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள தொலைபேசி எண் மற்றும் கைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.


கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசங்களுக்கு கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இது போன்ற சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டது தான் இபாஸ் முறை. இந்த இபாஸ் முறையை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இபாஸ் பெறுவதற்கான epass.tnega.org என்ற இணைய முகவரியை வெளியிடப்பட்டுள்ளது.




சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். பெயர்,முகவரி, எந்த வாகனம், எத்தனை பேர், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்த பின்னர் தான் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்களை க்யூஆர் கோடு மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்கள் செல்போன் மூலமாகவும், வெளி நாட்டை சேர்ந்தவர்கள் இ-மெயில் முகவரி மூலமாகவும் இ-பாஸ் பெறலாம். அரசு பேருந்துகளில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று முதல் இ-பாஸ் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதால், கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே க்யூஆர் கோடு மூலம் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த இடத்திலேயே இ-பாஸ் பதிவு செய்யப்பட்ட பிறகே வானங்கள் மற்றும் டூவிலர்கள் அனுமதிக்கப்படுகின்றன. இன்று மட்டும் 3,792 வாகனங்களுக்கு இ-பாஸ் மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும், இ-பாஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு 0451-29900233 என்ற தொலைபேசி எண் மற்றும் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


ஊட்டியில் தனியார் வாகனங்களுக்கு தான் இ-பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு  சார்ந்த வாகனங்கள், உள்ளூர் வாகனங்களில் பயன்படுத்தப்படும் டி என் 43 பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ பாஸ் நடைமுறை கிடையாது என  அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல  கூடிய கல்லார் என்ற பகுதியில் இபாஸ்  சோதனை நடைபெற்று வருகிறது. இங்கு வைத்து வாகனங்களை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்