வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் தொடர்பான பல முக்கியமான முடிவுகளை அமெரிக்கா எடுக்க உதவியவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் மரணமடைந்துள்ளார். 100வது வயதில் அவர் காலமாகியுள்ளார்.
இவர் பல சர்வதேச பிரச்சினைகளில் முக்கியத் தீர்வுகள் காண உதவியதால் புகழடைந்திருந்தாலும் கூட இந்தியாவுக்கு விரோதமாக நடந்து கொண்டவர். இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவை மடை மாற்றியவர் இவர்தான்.
ஜெர்மனியில் பிறந்த யூதரான இவர் அகதியாக அமெரிக்காவுக்கு வந்து செட்டிலானவர். பின்னர் குடியரசுக் கட்சியில் இடம் பெற்று, வெளியுறவு அமைச்சரானார். ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்டு ஆகிய இரு அமெரிக்க அதிபர்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர். பல முக்கிய சர்வதேச வெளியுறவு முடிவுகளை எடுக்க உதவியவர்.
அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் நிக்சனும், போர்டும் சில முக்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவுகளை எடுத்தனர். அதன் பின்னணியில் கிஸ்ஸிங்கர் உள்ளார்.
அமெரிக்கா - சீனா இடையிலான இறுக்கத்தைக் குறைத்து உறவை ஏற்படுத்தியவர் கிஸ்ஸிங்கர்தான். அதேபோல அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையிலான உறவிலும் மேம்பாட்டைக் கொண்டு வர உதவியவர் கிஸ்ஸிங்கர்தான். பனிப்போர் முடிவுக்கு வர கிஸ்ஸிங்கர் பெரும் பணியாற்றியுள்ளார்.
அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வரவும் பாடுபட்டவர் கிஸ்ஸிங்கர்தான். வியட்நாம் போரின்போது அமெரிக்கா பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கு மேலும் போரில் ஈடுபடுவது சரியாக இருக்காது என்று கூறி அமெரிக்காவை பின்வாங்க வைத்ததிலும் கிஸ்ஸிங்கர் நிறைய முயற்சித்துள்ளார். இதற்காகத்தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் கிடைத்தது.
100 வயதிலும் கூட அயராமல் உழைத்து வந்தார் கிஸ்ஸிங்கர் என்பது நினைவிருக்கலாம்.
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
சிறுநீரக கற்களைத் தடுக்கலாம்.. கவலைப்படாம.. இதைக் கொஞ்சம் பாலோ பண்ணிப் பாருங்க
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.520 உயர்வு!
{{comments.comment}}