மதுரை: ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி என்று இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஆங்கில வழி பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் கண்டங்கள் வலுத்துள்ளன. ஆங்கில புத்தகங்களின் தலைப்பை இந்தியில் மாற்றியதற்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், மத்திய அரசின் இந்த முடிவு ஒரு கடுமையான பகுத்தறிவின்மை மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறைக்கும் கலாச்சாரத் திணிப்பு. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதனை மேற்கோள் காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி!
ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி!
என்.சி.இ.ஆர்.டி. துவங்கி
எம். பி. களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு.
இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}