பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து சென்னை, சேலம்... அடுத்தடுத்து பரவும் HMPV வைரஸ்

Jan 07, 2025,10:11 AM IST

டில்லி : இந்தியாவில் பெங்களூரு, அகமதாபாத்தை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை மற்றும் சேலத்திலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் குறித்து பீதி தேவையில்லை என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


சீனாவில் கடந்த சில வாரங்களாகவே HMPV  வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மிக வேகமாக இந்த வைரஸ் பரவி, குழந்தைகளை குறி வைத்து தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிகிச்சை  பெறுவதற்காக ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். இதனால் உலக நாடுகள் பலவும் பதற்றம் அடைந்து வருகின்றன. 




இந்நிலையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் HMPV வைரஸ் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது. நேற்று காலை பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொன்ன சிறிது நேரத்திலேயே பெங்களூருவில் மற்றொரு குழந்தை, குஜராத்தின் அகமதாபாத்தில் 2 மாத குழந்தைக்கும் வைரஸ் தொற்று உறதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.


இதைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் HMPV வைரஸ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 


வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை என்பதால் பொது மக்கள் யாரும் கவலைப்பட அவசியமில்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகள் ஜனவரி 6ம் தேதி, மத்திய சுகாதார செயலாளருடன் நடைபெற்ற வீடியோ கான்பிரன்சிஸ் ஆலோசனையில் ஈடுபட்ட போது, இந்த வைரஸ் ஒன்றும் புதியது கிடையாது. 2001 ம் ஆண்டு முதலே இருந்து வருவது தான். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து, போதிய ஓய்வு, அறிகுறிகளுக்கான மருந்துகளும் எடுத்துக் கொண்டே குணமாகி விடும் என கூறி உள்ளனர்.


இது இன்ஃபுளுயன்சா வகை வைரசை சேர்ந்தது தான். இருந்தாலும் கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிந்து செல்வது, கைகளின் சுத்தத்தை பாதுகாப்பது போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும், லேசான அறிகுறிகள் இருக்கும் போது தேவையான மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்