சென்னை: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை வரை வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில், தற்போது 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காலை வரை 1.70 லட்சம் கன தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 1. 82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அதேபோல் ஒகேனக்கலில் உள்ள ஐந்து அருவிகளும் தண்ணீரால் மூழ்கியுள்ளன.
ஆற்றில் பரிசல் இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் குளிக்கவும் 16 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடிப்பெருக்கின் போது அனுமதிக்கப்பட்ட பகுதிகளை தவிர மற்ற ஆற்றுப் பகுதிகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், மேட்டூர் அணையில் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2.20 லட்சம்கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
வருக வருக.. தை மகளே வருக..!
உழவே உயிர்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
நிசமான பொங்கல்!
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
{{comments.comment}}