வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலி இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஆகும் .ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பூர்ணிமா எனப்படும் நிறைமதி அதாவது பௌர்ணமி நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்போது வட இந்தியா மட்டுமல்லாமல் உலகளாவிய பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது .வட இந்தியர்கள் குறிப்பாக மார்வாடிகள் மிகச் சிறப்பாக இப் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர்.
ஹோலி பண்டிகை பற்றிய புராணக்கதை:
ஹிரண்ய கசிபு என்கிற அசுர அரசனுக்கு பிரகலாதன் என்கிற மகன் இருந்தான் .அவன் விஷ்ணு பக்தன் .மற்றும் அசுரஅரசனுக்கு ஹோலி காஎன்னும் சகோதரியும் இருந்தாள். ஹிரண்யகசிபுவும் , ஹோலிகாவும் பிரகலாதனை தீயில் உட்கார வைத்து அழிக்க முயன்றனர். பிரகலாதன் விஷ்ணு பக்தன் ஆதலால் விஷ்ணுவின் அருளால் பிரகலாதன் உயிர்பிழைத்தான் . ஆனால் ஹோலிகா தீயில் கரிந்து விட்டாள். இந்த கதை எதை உணர்த்துகிறது என்றால்- 'நல்லவை தீமையின் மேல் வெற்றி பெறும் 'என்கிற தத்துவத்தை விளக்கும் விதமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை கொண்டாடும் முறை:
ஹோலிகாதகனம் :
ஹோலி பண்டிகையின் முதல் நாள் மரப்பொருட்கள், குச்சிகள் சேர்த்து வைத்து ஒரு பெரிய அழிப்புச் சுடர் அமைத்து எரிப்பார்கள். இது ஹோலி காவின் அழிவையும் தீமையின் மீது நல்லதின் வெற்றியை குறிக்கிறது .மக்கள் அக்னியை சுற்றி பிரார்த்தனை செய்து தீய எண்ணங்களை விடுவிப்பார்கள்.
வண்ணங்கள் திருவிழா ஹோலி:
மார்ச் மாதம் 13ஆம் தேதி மாசி 29ஆம் நாள் ஹோலி பண்டிகை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 'குலால் 'என்னும் பல வண்ணப் பொடிகளை தூவிக்கொண்டும், நீர் பீச் காரி, பலூன் ஆகியவற்றில் வண்ண நீர் நிரப்பி ஒருவர் மீது ஒருவர் அடித்து மகிழ்வார்கள்.
மகிழ்ச்சி நிறைந்த நன்னாளில் சகோதரத்துவத்தை பெரிதும் பாராட்டி மகிழ்வர். தமிழகத்தில் வட இந்தியர்கள் குடியேறிய இடங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது ஹோலி பண்டிகை.
ஹோலி கொண்டாடப்படும் இடங்கள் அதன் சிறப்பம்சங்கள்:
1. உத்தரப்பிரதேசம்- மதுரா ,பிருந்தாவன் இந்த கிருஷ்ண பகவான் புனித இடங்களில் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக ஹோலி கொண்டாடப்படுகிறது.
"லத்துமார் ஹோலி "என்ற பெயரில் பெண்கள் ஆண்களை குச்சியால் விளையாட்டாக அடிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடக்கும்.
2. ராஜஸ்தான் ,ஜெய்ப்பூர், உதயப்பூர் ஆகிய நகரங்களில் மகாராஜாக்களின் அரண்மனைகளில் சிறப்பு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறும்.
3. பஞ்சாபில் -"ஹோலி மோகா "(hola mohalla) சீக்கியர்களின் ஹோலி கொண்டாட்டம் வீரத்தை குறிக்கிறது.
ஹோலி -சிறப்பு உணவுகள்:
குஜியா(gujiya) என்கிற இனிப்பு சமோசா செய்து ஹோலி பண்டிகையை கொண்டாடுவர். பக்கோடா கடலைமாவினால் செய்வது மற்றும் தண்டாய் பால் ,மசாலா கலந்த பானம் பருகி மகிழ்வர்.
ஹோலியின் சிறப்பு:
* ஹோலி பண்டிகை கொண்டாடுவது நல்லவை தீமையின் மீது வெல்லும்.
* வாழ்க்கை முழுதும் வண்ணமயமான நினைவுகளுடனும், அனைவரும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
* மகிழ்ச்சி ,மன்னிப்பு மற்றும் புத்துணர்ச்சியும் மனித உறவுகளை உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.. உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}