ஹோலி ஹோலி ஹோலி.. சுப லாலி லாலி லாலி...!

Mar 03, 2026,03:34 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஹோலி பண்டிகை .. Holi- Festival of colours .. ஹோலி என்பது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா), "அரங்க பஞ்சமி" என்று அழைக்கப்படும் வண்ணத் திருவிழாவாகும். இந்து மாதமான பால்குனி மாதத்தில் பௌர்ணமி நாளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும்  இது இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்கால பண்டிகை ஆகும்.இந்தியா, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளிலும் இங்கிலாந்து, மொரிஷியஸ்,தென் ஆப்பிரிக்கா மற்றும்  பி ஜி  போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் இது வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும் பண்டிகை.


இந்தியாவில் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் "தோல் யாத்திரை" ( தௌ ல்  ஜாத்ரா) அல்லது "வசந்த உற்சவம்" எனவும் அழைக்கப்படுகிறது. திருவிழா  கிருஷ்ண பகவானுடன் தொடர்புடைய பிருந்தாவனம், மதுரா நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகையின் போது 16 நாட்கள், இவ்விடங்கள் சுற்றுலா தளங்களாக, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


ஹோலி பண்டிகையின் போது வட மாநிலங்களில் பல வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டும், ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்கள் கூறியும், திலகமிட்டும்  கொண்டாடி மகிழ்வர். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு மறைந்து அனைவரும் ஒன்று என்ற மகத்துவம் ஓங்கி நிற்பதே ஹோலிபண்டிகை விழாவின் சிறப்பு.


சோட்டி ஹோலி (choti holi): ஹோலிகா தகனம் 


 


பண்டைய இந்து புராணத்தின் படி ஹிரண்ய கசிபு எனும் அரக்க மன்னன் நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் 'நான்தான் கடவுள்' என்னைத்தான் வணங்க வேண்டும் என்று வற்புறுத்தினான். அவன் தீவிர சிவ பக்தன். சிவபெருமானிடம் தன் கடுமையான தவத்தினால் தன்னை மனித பிறவியாலும், விலங்கினாலும் அழிக்க முடியாத வரம்  பெற்றுக் கொண்டான்.


அவனுக்கு பிரகலாதன்  எனும் மகன் இருந்தான். அவன் தீவிர விஷ்ணு பக்தன்.ஆனால் மன்னன் எத்தனை முறை கூறியும் பிரகலாதன் விஷ்ணுவையே வணங்கினான். எனவே ஹிரண்யக் கசிபு  கோபமடைந்து தனது மகன் பிரகலாதனை கொல்ல  தனது சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான். நெருப்பு எதிர்ப்பு திறன் கொண்ட ஹோலிகா பிரகலாதனை ஒரு சிறையில் எரிக்க   முயன்றாள். மன்னன் ஹோலிகாவை  உட்கார வைத்து அவள் மடியில் பிரகலாதனை அமர்த்தி நெருப்பை மூட்டினார். விஷ்ணுவின் மீதான பக்தியின் காரணமாக ஹோலிகாவின் எதிர்ப்பு சக்தி பிரகலாதனுக்கு மாற்றப்பட்டு ஹோலிகா எரிக்கப்பட்டாள்.


தீமையை நன்மை வெற்றிகொண்டதன் அடையாளமாகவும், விஷ்ணுவின் பாதுகாப்பு சக்தியை கொண்டாடவும் ஹோலிகா தகனம் அல்லது சோட்டி ஹோலி(choti holi) என்று அழைக்கப்படும்  நெருப்பு ஹோலி பண்டிகைக்கு  முந்தைய இரவில் நெருப்பு மூட்டப்படுவதற்கு இந்த நிகழ்வே காரணம் ஆகும்.


பின்னர் மனித- சிங்க நரசிம்ம அவதாரத்தில் விஷ்ணு பகவான் ஹிரண்ய கசி புவை  கொன்றார்.இது தீமையை நன்மை வென்றதை உறுதிப்படுத்துகிறது. ஹோலிகாதகனம் ஆந்திர பிரதேசத்தில் காமதகனம் அல்லது காமன் எரிப்பு என குறிப்பிடப்படுகிறது.


ஹோலிக்கு  முதல் நாள் இரவு மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்வார்கள். ஹோலிகா  தகனம் ஆனதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றழுந்ததை  மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் "ஹோலி ஹோலி "என்று உற்சாகமாக குரல் எழுப்பி இனிப்பு பண்டங்களையும் தேங்காயுடன் சேர்த்து அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள்  ஒருவருக்கொருவர்  கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பல வண்ண பொடி காற்றில் உயர பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.


பல வண்ண பொடி:


ஹோலி பண்டிகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும்,நிறமும் நறுமணமும் கலந்த நீரை பீய்ச்சிகள்( பீச் காரி )  வழியாக பீய்ச்சுதல் ஆகியவையும் செய்து மகிழ்கின்றனர். ஹோலி பண்டிகையின் போது பயன்படுத்தும் பல வண்ண பொடிகள் ஆயுர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம் போன்றவற்றால் செய்யப்படுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. ஆனால் இன்றைய காலங்களில் நாளடைவில் வியாபார நோக்கத்திற்காக வணிகர்கள் சாயம் கலந்த செயற்கையான வண்ணங்களை அதிகமாக விற்பனை செய்கிறார்கள். ஆனால் இது சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்துகிறது.அதனால் மக்கள் அனைவரும் இயற்கையான வண்ணப் பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாடுவது சிறப்பு.

 

ஹோலி பண்டிகை சிறப்பு உணவுகள்:

 

ஹோலி பண்டிகை அன்று குஜியா,மால்புவா மற்றும் தண்டாய் ( இது ஒரு மசாலா பானம்), கஜஜாக்கள், அப்பளங்கள் பலவகை நொறுக்குத்தீனிகள், மாப்பூரிகள்,  பூரணப் போலிகள்,தயிர்வடை போன்ற பாரம்பரிய உணவுகள் வீட்டில் தயாரித்து நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் இருக்கும் குடும்பத்தினர் இடையே பகிர்ந்து உண்டு மகிழ்வர்.


ஹோலி பண்டிகையின் கொண்டாட்டத்தில் கிருஷ்ணன் -ராதை காப்பிய காதலை சார்ந்து அமையும் பல குழு இசை பாடல்கள் பாடப்படுகின்றன. ஓரி எனும் நாட்டர் பாடல்களும்,Aaj biraj mein Holi re rasiya, எனும் பாடல்கள் பாடி மகிழ்வர். பொது இடங்கள், மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மரத்தால் ஆன உருவ பொம்மைகளை எரிக்கும்  சடங்குகள் சில இடங்களில் நடைபெறுகின்றன. இந்த சடங்குகளை செய்த பிறகு இதனை தீ மூட்டி அந்த தீயை மக்கள் வணங்குவார்கள். பல வண்ணப் பொடிகளை தூவிக்கொண்டும்,பல வண்ண நீரை  பீ ய்ச்சுதல் மற்றும் "லோலா" எனப்படும் நீர் அடைக்கப்பட்ட பலூனை வீசிக்கொள்வதும் இவர்களுடைய மகிழ்ச்சியான செயல்பாடுகளில் ஒன்று. ஹோலி திருவிழாவின் போது பல வண்ணங்களில் கலவையில் விளையாடுவதால் அனைத்து கவலைகளும் கலைந்து வாழ்க்கை மிகவும் வண்ணமயமாக மாறும் என்று நம்பப்படுகிறது.


நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னால் இவ்வாறு புராண கதைகள் பல உள்ளன. அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள். நம் அனைவரது வாழ்வும் வண்ணமயமாக அனைத்து வளங்களும் நலங்களும் பெற வாழ்த்துக்கள். இன்று பிறந்தநாள் மற்றும் திருமணநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்