ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள தால் ஏரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹவுஸ் போட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி பல படகுகள் நாசமாகின. ஒரு படகில் ஏற்பட்ட தீவிபத்தால் மற்ற படகுகளுக்கும் தீ பரவி இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு தால் ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஹவுஸ் போட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீயானது அருகில் இருந்த பிற ஹவுஸ் போட்டுகளுக்கும் பரவியது. இதையடுத்து ஏரியில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகளும் பற்றி எரிய ஆரம்பித்தன.
இந்த படகுகள் தீப்பற்றி எரிந்ததைப் பார்க்கும்போது ஏரியே தீயில் எரிவது போல காட்சி அளித்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

தீ எப்படி பரவியது என்று தெரியவில்லை. கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் அல்லது மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}