Thuglife Review: கமல்ஹாசன் -சிம்புவின் தக் லைஃப் படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா?

Jun 05, 2025,09:26 PM IST

டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் எப்படி இருக்கு? படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? வாங்க தெரிந்து கொள்ளலாம்.


கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்- கமல் இணைந்துள்ள படம் தக் லைஃப். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு கமல் மற்றும் மணி ரத்னம் இணைந்து கதை எழுதி உள்ளனர்.




மணிரத்னம்-கமல் படம் என்றாலே அனைவருக்கும் நாயகன் படம் தான் நினைவிற்கு வரும். இதிலும் ரங்கராய சக்திவேல் நாயக்கராக கமல் நடித்துள்ளார். சக்திவேல்-சதானந்தா இடையேயான மோதல் துப்பாக்கி சூட்டில், சதானந்தாவின் மகன் அமரனை தூக்கிச் சென்று வளர்க்கிறார்கள். சக்திவேலின் சகோதரர் மாணிக்கத்தின் மகளின் மரணத்திற்கு காரணமானவனை சக்திவேல் கொலை செய்து விடுவதால், சிறை செல்கிறார். பிறகு அவரது சாம்ராஜியத்திற்கு அமரன் தலைவனாகிறான். பிறகு சக்திவேலை கொல்ல தொடர்ந்து பல முயற்சிகள் நடக்கிறது. தனது தந்தை கொல்லப்பட்டதற்கு சக்திவேல் தான் காரணம் என நினைத்து அமரன் - சக்திவேலை எதிர்க்கிறான். 


இதற்கிடையில் சிறு வயதில் பிரிந்த தனது சகோதரி பற்றி தெரிந்து கொள்கிறான் அமரன். அமரன் தனது சகோதரியுடன் சேர போகும் சமயத்தில் பழைய பகையால் அமரன் கொல்லப்படுகிறான். இப்படி அடுத்தடுத்த பழைய கதை பின்னல்களுடன் தக் லைஃப் படத்தின் கதை நகர்கிறது. அமரனின் மரணத்திற்கு பிறகு சக்திவேல் என்ன செய்கிறார் என்பது தான் படத்தின் மீதி கதை. சக்திவேலாக கமலும், அமரனாக சிம்புவும் மிரட்டி உள்ளனர். 


படத்தின் ப்ளஸ் :


கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் பட்டையை கிளப்பி உள்ளனர். அதிலும் சிம்புவின் நடிப்பில் அனல் பறக்கிறது. ஏஆர் ரகுமானின் இசை வழக்கம் போல் சூப்பர். 


படத்தின் மைனஸ் :


அடுத்தடுத்த காட்சிகள், படத்தின் கதை ஆகியவற்றை முன்கூட்டியே கணிக்க முடிகிறது. சுவாரஸ்யமாக, ரசிகர்களை கவரும் வகையில் படத்தில் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க சண்டை, அடிதடி காட்சிகள் தான் அதிகம். 


ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?


நாயகன், செக்க சிவந்த வானம் ஆகிய படங்களை மிக்ஸ் செய்து பார்த்தது போல் இருந்தது. எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்ததோ அந்த அளவிற்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. சிம்புவின் நடிப்பு, ரகுமானின் இசை தவிர சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படத்திற்கு எதுவும் இல்லை என்பதே பெரும்பாலான ரசிகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.


அதேசமயம், சிம்புவின் நடிப்புக்கும், கமல்ஹாசனின் நடிப்புக்கும் ரசிகர்கள் ஜே போட்டுள்ளனர். இந்த இருவரின் ரசிகர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களும் இருப்பதால் படம் பழுதில்லாமல் ஓடி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இனி இப்படி ஒரு பிறவி வேண்டாம்.. பிறவியே வேண்டாம்!

news

தடம் மாறும் தமிழர் பண்பாடு!

news

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!

news

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!

news

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!

news

தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!

news

SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்

news

எது தான் உண்மை..? .. சற்று யோசிப்போம்.. நிதானமாய் வாசிப்போம் .. Happy Housewife Day!

news

மீண்டும் ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி விலை... சவரனுக்கு ரூ.320 உயர்வு!

அதிகம் பார்க்கும் செய்திகள்