தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

Aug 08, 2025,01:06 PM IST

மதுரை : தவெக.,வின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதியில் இருந்து 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசார் சார்பில் கேட்கப்பட்ட 24 நிபந்தனைகள் அடங்கிய கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டு, போலீசாரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம், மாநாட்டிற்கான வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.


இதுவரை கிடைத்துள்ள உளவுத்துறை மற்றும் தவெக கட்சி வட்டார தகவல்களின் படி, விஜய்யின் தவெக மாநாட்டிற்கு 15 முதல் 16 லட்சம் பேர் வருவார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் தவெக மாநாட்டிற்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தால் அது மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தி விடும். இதனால் தவெக மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை தடுப்பதற்கான வேலைகளும் கூட மறைமுகமாக நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் மாநாட்டிற்கு குறைந்த பட்சம் 10 லட்சம் பேராவது வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய்யின் இந்த மதுரை மாநில மாநாட்டிற்கு அதிக அளவில் கூட்டம் வந்தால் அது அதிமுக, திமுக இரு கட்சிகளுக்குமே நெருக்கடியை ஏற்படுத்தி விடும். இவர்களில் அதிக நெருக்கடி யாருக்கு என்று பார்த்தால், அதிகமான கூட்டணி கட்சிகளை வைத்திருக்கும் திமுக.,விற்கு தான். தனது முதல் மாநில மாநாட்டிலேயே, தங்கள் தலைமையில் அமைய உள்ள கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கப்படும் என ஓப்பனாக அறிவித்து விட்டார் விஜய். ஆனால் அதை அப்போது எந்த கட்சியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போதுள்ள நிலைமை வேறு. ஒரு பக்கம் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் திமுக, அதிமுக.,விற்கு மாற்றாக விஜய் வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில், குறிப்பாக இளைஞர்கள் மனதில் தோன்ற துவங்கி விட்டது. 




இந்த நிலையில், 2வது மாநில மாநாட்டில் தற்போது தமிழகத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் பற்றி நிச்சயம் விஜய் பேசுவார். அப்படி பேசும் போது, தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை விஜய் அறிவித்து விட்டால், திமுக கூட்டணியில் இருக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் விஜய் பக்கம் போய் விடலாமா என்ற நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளது. அது மட்டுமல்ல திமுக கூட்டணியில் இருந்தால் 6 சீட்கள் ஒதுக்கப்படுவதே போராடி தான் வாங்க வேண்டும். காரணம், கூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைவருக்கும் சீட் ஒதுக்க வேண்டிய கட்டாய சூழல் உள்ளது.


அதுவே விஜய்யுடன் கூட்டணி வைத்தால் தாளாரமாக 20 முதல் 40 சீட்களை பெற முடியும். அவற்றில் 10 முதல் 15 சீட்களில் வெற்றி பெற்றாலே மிகப் பெரிய செல்வாக்காக இருக்கும். அது மட்டுமல்ல விஜய் அறிவித்தது போல் ஆட்சியில் பங்கும் கிடைத்தால் அமைச்சரவையிலும் இடம் கிடைக்கும். இவற்றை எல்லாம் சிறிய கட்சிகள் யோசித்து, தங்களுக்கு இருக்கும் அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த முயற்சி செய்யும் போது திமுக கூட்டணியில் நிச்சயம் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிகவில் என்ன நடக்கிறது?.. பிரேமலதாவுடன் கே.சி. வீரமணி சந்தித்தது எதற்காக??

news

தானே முதல்வர் வேட்பாளர்.. அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய் புரட்சி படைப்பார்.. இந்தியா டுடே தகவல்!

news

ராமதாஸ், அன்புமணி நேரில் வாங்க.. தனியாக பேச வேண்டும்.. நீதிபதி உத்தரவு.. அடுத்தது என்ன?

news

தவெக மாநாட்டிற்கு கூட்டம் சேர்ந்தால் என்ன நடக்கும்.. யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்?

news

BREAKING: 11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து.. இந்த ஆண்டே அமல்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

news

டெல்லியில் ஷாக்கிங்.. பார்க்கிங்கில் தகராறு.. நடிகை ஹூமா குரேஷியின் உறவினருக்கு நேர்ந்த விபரீதம்

news

டிரம்ப் வரி எதிரொலி.. இந்திய ஆடைகளை வாங்கவதை நிறுத்தி வைக்கும் அமேசான், வால்மார்ட்

news

ஆகஸ்ட் 12ல் தாயுமானவர் திட்டம் துவக்கம்...யாருக்கு இந்த திட்டம்?

news

ரக்ஷா பந்தன் 2025.. உடன்பிறப்புகளின் இனிய பந்தம்.. பாசப் பிணைப்பின் அடையாளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்