- ச.சித்ரா தேவி
சென்னை: தமிழ்க் கலாச்சாரத்தில் குங்குமம் என்பது மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக பெண்களுகு குங்குமம் மிக மிக முக்கியமானது, இதைப் புனிதமாக நமது கலாச்சாரத்தில் சொல்லி வைத்துள்ளனர்.
பாரம்பரியமாக, ஒரு பெண் தனது வாழ்க்கையில் மூன்று புனிதமான இடங்களில் கட்டாயம் குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி வைத்துள்ளனர்.
1. முன் நெற்றி

இது மிகவும் முக்கியமான இடம். ஞானம், தெளிவு மற்றும் ஆசீர்வாதங்களைப் பெற இந்த இடத்தில் குங்குமம் இடுவது அவசியம். இது மங்களத்தின் அடையாளம் மட்டுமல்ல, தெய்வீக சக்தியை ஈர்க்கும் இடமாகவும் கருதப்படுகிறது.
2. வகிடு மத்தி
உச்சி வகிட்டின் மத்தியில் குங்குமம் இடுவது, கணவரின் ஆயுளையும், குடும்பத்தின் சௌபாக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் என்பது ஐதீகம். திருமணமான பெண்களின் அதிர்ஷ்ட ரேகை இந்த இடத்தில்தான் இருப்பதாக நம்பப்படுகிறது.
3. மாங்கல்யம் (தாலிச் சரடு):
திருமணத்தின் மிக உயர்ந்த சின்னமான தாலிக் கயிற்றில் (மாங்கல்யச் சரடில்) தினமும் குங்குமம் வைத்து பூஜிப்பது, கணவன்-மனைவி பந்தத்தை பலப்படுத்தும். இதை சக்தி வாய்ந்த பாதுகாப்பு வளையமாகக் கருதுவதுண்டு.
ஸ்டிக்கர் பொட்டு வைப்பதைத் தவிர்த்து, பசும்பால் அல்லது சந்தனத்தை பயன்படுத்தி பாரம்பரிய குங்குமத்தை மட்டுமே பயன்படுத்துவது மிகுந்த மங்களத்தைக் கொடுக்கும். மேலும், எவ்வளவு விலை உயர்ந்த தங்க நகைகளைக் காட்டிலும், தாலிக் கயிற்றிற்குத்தான் (திருமாங்கல்யச் சரடிற்குத்தான்) அதிக தெய்விக சக்தியும், மதிப்பும் சாஸ்திர ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல தினமும் காலையில் அக்கினி பகவானை வணங்கி அதன் பின் அடுப்பு பற்ற வைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி நாட்களில் அடுப்பைத் துடைத்து மஞ்சள் குங்குமம் இட்டு அதன் பின் அடுப்பு பற்ற வைக்க வேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் மனசில் வச்சுக்கங்க. ஒருவருக்கு உணவு பரிமாறும் போது வெறுப்புடனோ கோபமாகவோ பரிமாறிக் கூடாது. இது பெண்களுக்கு மட்டும் இல்லிங்கை. ஆண்களுக்கும் கூட பொருந்தும். பாசத்துடனும், சந்தோஷத்துடனும் உணவு பரிமாறிப் பாருங்க.. உறவும் வலுப்படும், அன்பும் கூடும்.
(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று சவரன் ரூ.96,480 விற்பனை!
3 இடங்களில் குங்குமம் வைக்க வேண்டும்.. பெண்களே இதைத் தெரிஞ்சுக்கோங்க!
பார்த்துப் பதறாமல் நகர்ந்து போகும் காற்றழுத்தம்.. அதான் மழை இன்னும் நிக்கலையாம்!
தமிழக வாக்காளர்கள் பட்டியலில் இறந்து போன 24 லட்சம் பேரின் பெயர்கள்
டைரக்டர் ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்? அவரே சொன்ன செம தகவல்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்
அஜித் ஸ்டைலில் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த வேண்டுகோள்
டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்
{{comments.comment}}