- தா. சிலம்பரசி
சென்னை: மழைக்காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை லிஸ்ட் போட்டால் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸா போகும். ஆனால் அதையும் சமாளித்துதானே ஆக வேண்டும். அதுக்குத்தான் இந்த கட்டுரை.. வாங்க படிக்கலாம்.
மழை என்பது இயற்கையின் மிக அழகான பரிசாகும். மழை பெய்யும் பொழுது மண்ணின் மணம் நம் மனதை மகிழ்விக்கிறது. பூமி பசுமையாக, செழுமையாக, உயிர்ப்போடு மாறுகிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
மழை தான் விவசாயிகளின் உயிர். பயிர்கள் செழித்து வளர மழை நீர் மிகவும் அவசியமானது. எனவே மழை என்பது வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்களில் ஒன்றாகிறது. ஆனால், மழைக்காலம் அழகுடன் சேர்த்து சில சவால்களையும் கொண்டுள்ளது.
மழைக்காலத்தில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள்:
1. சாலைகளில் நீர் தேக்கம்:
மழை நீர் தேங்கி மண்அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைவது ஒரு பெரிய பிரச்சனை. இதனால் வாகனங்கள் சிக்கி போகின்றன; பள்ளி, அலுவலகம் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சில இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகிறது.
2. மின்சாரத் தடை:
இடியுடன் கூடிய மழையால் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக மின்கம்பிகள் சேதமடைவது வழக்கமானது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
3. சுகாதார பிரச்சனைகள்:
மழைக்காலத்தில் கொசுக்கள் பெருகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன. மேலும், சுத்தமின்மை காரணமாக நீர் மாசுபட்டு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.
4. விவசாய சிக்கல்கள்:
மழை அளவு அதிகமாக இருந்தால் பயிர்கள் அழிவதற்கும், குறைவாக இருந்தால் வறட்சி நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இது விவசாயிகளின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மழைக்கால பிரச்சனைகளுக்கான தீர்வுகள்:
நாம் இவ்வாறான பிரச்சனைகளை முன்கூட்டியே சிந்தித்து தவிர்க்கலாம். அதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
1. வீட்டு பராமரிப்பு:
மழைக்கு முன் வீட்டு கூரை, சுவர், வடிகால் வழிகளை சுத்தம் செய்து வைக்க வேண்டும். தண்ணீர் தேங்கும் இடங்களை அகற்ற வேண்டும்.
2. சுத்தம் மற்றும் கொசு தடுப்பு:
வீடு சுற்றியுள்ள இடங்களில் குப்பை தேங்க விடக்கூடாது. மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கொசு வளர்ச்சி தடுக்கப்படும்.
3. ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்பு:
சுத்தமான காய்ச்சிய தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். மழைநேரத்தில் வேகவைத்த உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
4. மின்சார பாதுகாப்பு:
மின்சார சாதனங்களை ஈரமான இடங்களில் தொடக்கூடாது. மின்னல், இடியுடன் கூடிய மழையின் போது மரங்களின் கீழ் நின்று கைபேசி பேசுதல் கூடாது.
5. மழைநீர் சேகரிப்பு:
மழைநீரை சரியான முறையில் சேகரிக்கலாம். இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, எதிர்கால நீர் பற்றாக்குறையைத் தவிர்க்க உதவும்.
6. மாணவர்களின் முன்னெச்சரிக்கை:
மழைக்காலத்தில் மாணவர்கள் மழைக்கோட், குடை போன்றவற்றை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மழை நம் வாழ்விற்கு அத்தியாவசியமானது. ஆனால் விழிப்புணர்வு, சுத்தம், பாதுகாப்பு ஆகியவை இணைந்தால்தான் மழை நமக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் எளிய பழக்கங்களை கடைப்பிடித்தால் மழைக்காலத்தையும் நலமாக, மகிழ்ச்சியாக கடக்கலாம்.
எனவே நண்பர்களே, மழை நமக்கு ஆசீர்வாதமாக இருக்கட்டும், ஆபத்தாக அல்ல. மழைக்காலத்தை விழிப்புடன் பாதுகாப்புடன் எதிர் கொண்டு மகிழ்ச்சி அடைவோம்.
(தா. சிலம்பரசி வேலூர் மாவட்டம் மேல்மணவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 13 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஆன்லைன் வகுப்புகள், செயல் ஆராய்ச்சி, 3D மற்றும் AI தொழில்நுட்பம், விளையாட்டு வழிக் கற்றல், மின்னணு மதிப்பீடு போன்ற நவீன முயற்சிகளின் மூலம் தொடக்க நிலை மாணவர்களை ஆர்வமுடன் கற்றலில் ஈடுபடுத்தி, தமிழ்நாடு அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளார். தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசின் ஊஞ்சல், தேன் சிட்டு, கனவு ஆசிரியர் இதழ்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, மாணவர்களின் கதை, கவிதை, ஓவியம், கட்டுரை போன்ற படைப்பாற்றல் திறன்களை வளர்த்துள்ளார். இவரின் சிறந்த கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2025 ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்துள்ளது)
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}