- ஸ்வர்ணலட்சுமி
எப்பப் பார்த்தாலும் அரிசியே சாப்பிட்டுப் பழகிய ஆளா நீங்க.. அட முதல்ல அதை மாத்துங்க பாஸ்.. உடம்புக்கு ஏதாவது வந்த பிறகு சுதாரிப்பதை விட முன் கூட்டியே, நம்ம உடம்புக்கு நல்லது செய்யும் சாப்பாட்டுக்கு மாறுவது நல்லதுதானே..!
அந்த வகையில் இப்போது மக்களிடையே பிரபலமாகி வருகிறது சிறு தானிய வகை உணவுப் பழக்கம். அது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. அதேபோல இந்த கருப்பு கவுனி அரிசியையும் மக்கள் இப்போது அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பிதுள்ளனர். அதை வைத்து ஏகப்பட்ட உணவு ஐட்டங்களை செய்யலாம். சாப்பிடவும் நல்லாருக்கும், உடம்புக்கும் ரொம்ப ரொம்ப நல்லது.
சரி, கருப்பு கவுனி அரிசியில் பொங்கல் செய்வது எப்படின்னு இப்ப பார்க்கலாமா!

தேவையான பொருட்கள் :
கருப்பு கவுனி அரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 1 கப்
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 10 இலை
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கவும்)
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் (தேவைப்பட்டால் சேர்க்கலாம்)
செய்முறை :
கருப்பு கவுனி அரிசியை கழுவி, தண்ணீரை வடித்து விட்டு, மிக்ஸியின் கொர கொரப்பாக அரைக்க வேண்டும். கோதுமை ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு கவுனி அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சீரகம், மிளகு(பொடி செய்தது, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி ஆகியவற்றை குக்கரில் சேர்த்து வேண்டும், அரிசி அளந்த கப்பால் 4 கப் தண்ணீரையும் அதோடு சேர்க்க வேண்டும். 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.
பிறகு குக்கர் பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, அதில் தேங்காய் அல்லது தேங்காய் துருவல் சேர்த்து கிளறினால் சூடான கருப்பு கவுனி அரிசி பொங்கல் ரெடி. சாம்பார், தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் வேற லெவலில் சுவை அள்ளும். வெறும் 15 நிமிடங்களிலேயே இதை செய்து விடலாம் என்பதால் சமைப்பதும் மிக சுலபம்.
கருப்பு கவுனி அரிசிக்கு, எம்பரர்ஸ் ரைஸ் என்று பெயர். சர்க்கரை நோய் இருப்பவர்கள், ரத்தக்க கொதிப்பு உள்ளவர்கள், இதய பிரச்சனைகள் உள்ளவர்கள், பெண்கள் என அனைவருக்கும் மிகச் சிறந்த காலை உணவு. இதில் எண்ணெய், நெய் என எதுவும் சேர்க்காததால் எந்த வயதினரும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
செஞ்சு பார்த்து சாப்பிட்டுட்டு சொல்லுங்க.. நல்லாருந்துச்சான்னு!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
{{comments.comment}}