- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு சுபகாரிய நிகழ்விலும் மங்களகரமான துவக்கத்தின் அடையாளமாக நாம் குத்துவிளக்கு ஏற்றி துவங்குவது நமது பாரம்பரியம் ஆகும். ஆலயங்களிலும், வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் குத்துவிளக்கு ஏற்றுவது லக்ஷ்மி கடாட்சமாக கருதப்படுகிறது. விளக்குகளில் எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றுவது லக்ஷ்மி கரமானது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. விளக்குகளை ஏற்றும் பொழுது கவனிக்க வேண்டிய சிறு தகவல்களை பார்ப்போம்...
விளக்குகளில் குத்துவிளக்கு, காமாட்சி தீபம்,அகல்விளக்கு, மாட தீபம்,குபேர தீபம், அஷ்டலட்சுமி தீபம், என இவ்வாறு பல விளக்குகளை நாம் பயன்படுத்துவதுண்டு. வெள்ளி,பித்தளை மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் என அவரவர் குடும்ப வழக்கப்படி ஏற்றி வழிபாடு செய்கிறோம். இன்றைய நாட்களில் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு மட்டுமல்லாது பல வடிவங்களில் விளக்குகள் கடைகளில் கிடைக்கின்றன.
விளக்கேற்றும் நேரம்: அதிகாலை 4:00மணி முதல் 6:00 மணி வரை பிரம்ம முகூர்த்தத்தில் சூரிய உதயத்திற்கு முன்னும், மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு 6:00 மணி முதல் 7:00 மணி வரை ஏற்றுவது சிறப்பு. வேலைக்கு செல்பவர்கள் காலையில் விளக்கு ஏற்ற நேரம் இல்லை என்றாலும், மாலையில் விளக்கேற்றுவது சிறப்பு.

குத்துவிளக்கின் அடிப்பாகம்- பிரம்மம், நடுப்பகுதி- விஷ்ணு, மேற்பகுதி- சிவம்,நெய்- நாதம்,திரி- பிந்து, சுடர்- கலைமகள், தீபமகள் - லட்சுமி என்று கூறப்படுகிறது.
விளக்கு ஏற்றும் முறைகள் மற்றும் திசைகள் பற்றி பார்ப்போம்..
விளக்கு ஏற்றும் பொழுது 1.கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது அனைத்து துன்பங்களும் நீங்கி,மன அமைதி கிடைக்கும்.
2. வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது ஞானம்,அறிவு, செல்வம் பெருகும். தடைகள் நீங்கும்.
3. மேற்கு திசை நோக்கி விளக்கேற்றுவது கடன் தொல்லைகள் நீங்கும். தோஷங்கள் குறையும் என்று கூறப்படுகிறது.
4. தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் அபசகுணம் என்றும் பாவங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
எத்தனை முகம் விளக்கேற்றலாம் மற்றும் அதன் பலன்கள்:
ஐந்து முகமுடைய குத்துவிளக்கினை ஐந்து திரி போட்டு விளக்கேற்றுவது சர்வ நன்மைகளும், வீட்டில் செல்வம் எப்போதும் செழித்துக் கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. சிலர் வீடுகளில் இன்றும் இம்முறையை கடைப்பிடிக்கின்றனர். நான்கு முகம் - அஷ்டலட்சுமி அருள் கிடைக்கும். மூன்று முகம் -ஏற்றினால் புத்திரர்கள் தொடர்பான இன்பங்கள் கிடைக்கும். இரண்டு முகம் -ஏற்றினால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். ஒரு முகம் ஏற்றுவது நற்பலன்களை தரும்.
பூஜை அறையில்எத்தனை விளக்குகள் ஏற்றலாம் என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. குத்துவிளக்கு இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறப்பு. காமாட்சி தீபம்,அகல் விளக்கு என்பது ஒரு விளக்கு ஏற்றலாம். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தீபங்கள் ஏற்றுவது விசேஷமானது. பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றுவது சகல நன்மைகளையும் தரும்.
எந்தெந்த விளக்கிற்கு என்ன பலன்?
அகல் விளக்கு அல்லது மண் விளக்கு ஏற்றும் பொழுது சகலவிதமான நன்மைகளும் கிடைக்கும். பித்தளை விளக்கு குடும்ப ஒற்றுமை மேம்படுத்தும்.
வெள்ளி விளக்கு வீட்டிலும் மனதிலும் அமைதியை ஏற்படுத்தும்.மகாலட்சுமி அருள் நிறைவாக கிடைக்கும். பஞ்சலோக விளக்கு சர்வ வசியம் உண்டாக்கும். தங்க விளக்கு ஏற்றுவது ஆயுள் நீட்டிக்கும்.
எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் என்ன பலன்கள்?..
பஞ்ச தீப எண்ணெய் (பஞ்ச கூட்டு எண்ணெய்), நெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி விளக்கேற்றுவது சிறப்பு. கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் விளக்கேற்ற பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நெய் தீபம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும், நினைத்தது நிறைவேறும்.
நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் ஆரோக்கியம் மேம்படும்.
விளக்கெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் புகழ் உண்டாகும்.
தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் வசியத்தை பெற்று தரும்.
இலுப்பை எண்ணெய்- கடன் பிரச்சினைக்கு தீர்வை தந்து, காரிய சித்தி உண்டாக்கும்.
பஞ்ச கூட்டு எண்ணெய் அனைத்து தெய்வங்களின் அருளும், குலதெய்வத்தின் அருளையும் பெற்று தரும்.
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் விளக்குகளை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். விளக்கின் திரியை வெறும் கைகளால் தூண்டக்கூடாது. பூவின் காம்பு அல்லது திரி தூண்டியை பயன்படுத்துவது சிறப்பு.
விளக்கினை குளிர வைப்பது எப்படி?..
திரி தூண்டுதலை பயன்படுத்தி விளக்கில் உள்ள திரியை பின்னோக்கி இழுத்தோ அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை மலையேற்றலாம். வாயால் ஊதக்கூடாது. கையை வைத்து விசிறி விளக்கை குளிர வைக்க கூடாது.
முதலில் வீட்டின் நிலை வாசலில் தீபம் ஏற்றிய பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது சிறப்பு. குறைந்தது அரை மணி நேரம் தீபம் எரிய விட வேண்டும்.
குலதெய்வ கோயிலுக்கு செல்ல இயலாதவர்கள் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில் ஒரு ரூபாய் நாணயம், இலுப்பை எண்ணெய் ஊற்றி,இரண்டு பஞ்சுத் திரிகளை ஒன்றாக இணைத்து,மனதிற்குள் குல தெய்வத்தை நினைத்து, மனதார குலதெய்வத்தின் பெயரை மனதில் உச்சரித்துக் கொண்டு கிழக்கு திசை நோக்கி பூஜை அறையில் விளக்கு ஏற்றி வர குலதெய்வ அருள் கட்டாயம் கிடைக்கும்.
வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள்,ஆண்கள் என அனைவரும் விளக்கேற்றி வழிபடுவது அனைத்து வளங்களும் நலங்களும் உருவாக்கும்.
மேலும் இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்.. விளக்கேற்றும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
யெஸ் வங்கி கடன் மோசடி ...அனில் அம்பானியின் ரூ. 1,120 கோடி சொத்துகள் முடக்கம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
ஆன்மீகம் அறிவோம்.. தேவலோகத்திலிருந்து.. பூமிக்கு வந்தபோது.. சிவன் என்ன செய்தார் தெரியுமா?
தொடர் சரிவில் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}