நம்மளோட பாரம்பரிய உணவுகள் பல வகையிலும் நமது ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கின்றன. அவற்றையெல்லாம் சாப்பிடுவது தற்போது குறைந்து போய் விட்டது. பாஸ்ட் புட், அது இது என்று மக்கள் திசை மாறிப் போய் கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்து வைத்துள்ளோம்.
தற்போதுதான் பாரம்பரிய உணவுகளின் அருமை புரிந்து பலரும் அதுகுறித்து தற்போது ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் சோளம் கம்பு சாதம் ஒரு அருமையான உணவாகும். முழுக்க முழுக்க உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான சூப்பர் சாதம் இது. வாங்க எப்படி பண்றதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோளம் ஒரு கப்
கம்பு ஒரு கப் ( நாட்டுக்கம்பாக இருந்தால் மிகவும் நல்லது)
வடித்த சாதம் ஒரு கப்
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. சோளம் , கம்பு தலா ஒரு கப் எடுத்து நன்றாக கழுவவும் பிறகு தண்ணீரை வடிக்கவும்.
2. மிக்ஸி ஜாரில் கம்பு சோளம் இவற்றை சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
3. பிறகு குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்த சோளம் கம்பு இவற்றை சேர்க்கவும். கட்டியில்லாமல் நன்றாக கிளறவும்.
(குறிப்பு :2 : 4 கப் தண்ணீர்)
4. குக்கரில் நன்றாக கொதித்து வந்ததும் வந்ததும் மூடி போட்டு மூன்று விசில் விடவும். எந்த கப்பில் கம்பு சோளம் அளவு எடுத்தோமோ அதே கப்பில் தண்ணீர் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்)
5. குக்கர் பிரஷர் அடங்கியதும் மூடியை திறந்து நன்றாக கிளறவும்.
6. வடித்த சாதம் ஒரு கப் இதனுடன் சேர்ந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்
7. இதற்கு பூண்டு துவையல், இஞ்சி துவையல், சிறிய கொண்டை கடலை குழம்பு சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்
8. தயிர் சேர்த்து சாப்பிடும் பொழுது பொடியாக மாங்காய், சிறிய வெங்காயம் கட் செய்து சேர்த்து சாப்பிட உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும்.
9. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்
கம்பு ,சோளம் இவற்றின் பயன்கள் பற்றி பார்ப்போமா..
1. கம்பு மற்றும் சோளம் இரண்டும் உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய சிறு தானியங்கள் ஆகும். கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. சோளம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலை தடுக்கிறது.
2. கம்பு ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
3. மலச்சிக்கலை போக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கம்பு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஏற்ற உணவு.
4. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குடல் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
5. கம்பு வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
சோளம் நன்மைகள்:
1. சோளத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதனால் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
2. நீரிழிவு நோயாளிகளுக்கு சோளம் நல்ல பலன் அளிக்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. குடல் ,வயிறு புற்று நோய்கள், மூலநோய் போன்றவற்றை தடுக்க சோளம் ஒரு நல்ல சிறுதானியம்.
3. சோளத்தில் பி வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது. இது வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்திற்கு உதவுகிறது. நரம்பு செல் வளர்ச்சிக்கு நல்ல பலன் கொடுக்கும்.
4. சோளத்தில் ஆக்ஸிஜனேற்றுகள் அதிகம் உள்ளது. இது ஆக்சிஜனேற்ற சேதரிப்பிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
இத்தனை பயனுள்ள கம்பு சோளம் இவற்றை பயன்படுத்தி சாதம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோமாக .மேலும் இது போன்ற ஆரோக்கியமான ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
சென்னையில் அதிகரித்து வரும் இரவு நேர வெப்ப நிலை.. இதுதான் காரணம்.. விழிப்புணர்வு தேவை
விஜய் 51.. தவெக தொண்டர்கள், ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு.. 3வது உலகப் போர் வெடிக்குமா?
Hot air balloon fire: பிரேசில் துயரம்.. ஹாட் ஏர் பலூன் தீப்பிடித்து எரிந்து விழுந்தது.. 8 பேர் பலி
போர்களும், மோதல்களும் சூழ்ந்த உலகம்.. யோகா அமைதியைக் கொண்டு வரும்.. பிரதமர் மோடி நம்பிக்கை
வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்
இல்லத்தரசி.. உண்மையில் அப்படித்தான் நாம் பெண்களை மதிக்கிறோமா?
ஆபரேஷன் சிந்து தொடர்கிறது.. ஈரானிலிருந்து இதுவரை 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
17.5 கோடிக்கு வீடு வாங்கி .. 1.6 கோடிக்கு.. வாடகைக்கு விடும் நடிகர் மாதவன்!
{{comments.comment}}