குலாப் ஜாமுன்.. கேட்டதுமே எச்சில் ஊறும்.. இது ராஸ் அல் கைமா ஸ்டைல்!

Apr 04, 2026,05:07 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


வீட்டில் எளிதாக செய்யக்கூடிய இனிப்புகளில் மிகவும் பிரபலமானது குலாப் ஜாமுன். பண்டிகைகள் வந்து விட்டால் எல்லோருக்கும் பிடித்த இந்த ஸ்வீட் கட்டாயம் இருக்கும். செய்வது சுலபம் என்பதால் இதை இந்தியர்களின் டீபால்ட் ஸ்வீட் என்றும் கூட சொல்லலாம்.


சரி அதை விடுங்க.... நம்ம ஸ்டைல்லை இதை செஞ்சு பார்க்கலாம் வாங்க.


தேவையான பொருட்கள்:


குலாப் ஜாமுன் மிக்ஸ் – 1 கப்

பால் – தேவையான அளவு

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

எண்ணெய் அல்லது நெய் – பொரிக்க


செய்முறை:




1. ஒரு பாத்திரத்தில் குலாப் ஜாமுன் மிக்ஸை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து மென்மையாக மாவாக பிசையவும்.


2. மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.


3. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி, அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.


4. கடாயில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கி, உருட்டி வைத்த மாவை மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும்.


5. பொரித்த ஜாமுன்களை சூடான சர்க்கரை பாகில் போட்டு 20–30 நிமிடம் ஊற விடவும்.


சுவையான குலாப் ஜாமுன் தயார்!


இவ்வாறு வீட்டிலேயே எளிதாக குலாப் ஜாமுன் செய்து, குடும்பத்தினருடன் இனிமையாக ருசித்து மகிழலாம்.


குலாப் ஜாமுன் சில நேரம் ஹார்டு ஆக இருந்து விட்டால் சாப்பிடும் சுவையே போய் விடும். எனவே அது மென்மையாக வர சில டிப்ஸ் இருக்கு..  அதையும் பாலோ பண்ணிக்குங்க.


1. மாவை அதிகமாக பிசையக்கூடாது, மெதுவாக மட்டும் பிசைய வேண்டும். அதிகமாக பிசைத்தால் ஜாமுன் கடினமாகிவிடும்.


2. மாவு மென்மையாக இருக்க வேண்டும். பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சாப்ட் ஆக பிசைய வேண்டும்.


3. உருண்டை வெடிப்பு இல்லாமல் உருட்ட வேண்டும். மேலே பிளவு இருந்தால் பொரிக்கும் போது உடைந்து விடும்.


4. புல் பிளேமில் அடுப்பை வைக்காதீங்க. மிதமான தீயில் பொரிக்க வேண்டும். அதிக தீயில் பொரித்தால் வெளியே மட்டும் சிவந்து உள்ளே வேகாமல் இருக்கும்.




5. சூடான பாகில் உருண்டையைப் போட வேண்டும். பொரித்த உடனே வெதுவெதுப்பான சர்க்கரை பாகில் போட்டால் ஜாமுன் நன்றாக பாகை குடிக்கும்.


இப்படி செய்தால் குலாப் ஜாமுன் மிகவும் மென்மையாக வரும். சாப்பிடவும் சூப்பராக இருக்கும். செஞ்சு சாப்பிட்டுப் பார்த்துட்டு மறக்காம கமெண்ட்டை சொல்லிட்டுப் போங்க, ஓகேவா.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்