traditional maavadu receipe பாட்டி ஸ்டைல் பாரம்பரிய மாவடு எப்படி போடுவது?

Mar 27, 2026,04:13 PM IST

இது பழைய வீட்டுச் சுவை, நல்லெண்ணெய் வாசனை, காரப் புளிப்பு கலந்த ருசி எல்லாம் வரும் மாதிரி இருக்கும்.


பாட்டி ஸ்டைல் பாரம்பரிய மாவடு செய்முறை:

தேவையான பொருட்கள் :


சின்ன வடுமாங்காய் – 1 கிலோ

கல் உப்பு – 250 கிராம்

மிளகாய் தூள் – 100 முதல் 125 கிராம்

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கடுகு – 50 கிராம்

வெந்தயம் – 1 மேசைக்கரண்டி

பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் – 200 மில்லி

பாட்டி முதலில் சொல்வது – “தண்ணீர் படக்கூடாது!”

மாவடு நல்லா வரணும்னா இது தான் ரகசியம்.

முதலில் என்ன செய்யணும்?

மாங்காயை நன்றாக கழுவணும்

பிறகு ஒரு பருத்தி துணியால் ஒவ்வொன்றாக துடைக்கணும். அப்படியே நிழலில் 2–3 மணி நேரம் பரப்பி வைக்கணும். மாங்காயில் ஒரு துளி தண்ணீரும் இருக்கக் கூடாது.


செய்முறை – பாட்டி கைப்பக்குவம் :




1. மாங்காயை உப்பில் முதலில் போடணும். ஒரு மண் பானை / பாரம்பரிய ஜாடி எடுத்துக்கொள்ளவும் (இல்லையென்றால் கண்ணாடி ஜாடியும் போதும்)

அதில்:

மாங்காய்

கல் உப்பு

மஞ்சள் தூள்

சேர்த்து நன்றாக குலுக்கணும்.

பாட்டி டிப்: “கையால நன்றாக புரட்டி உப்பு ஒட்டணும்!”

2. இதை 3 நாட்கள் ஊற வைக்கணும். மூடி வைத்து விடவும். தினமும் காலை, மாலை ஜாடியை லேசாக குலுக்கணும். 3 நாள் கழிச்சா என்ன ஆகும்?

மாங்காயிலிருந்து உப்பு சாறு வெளியே வரும். மாங்காய் கொஞ்சம் மெலிதாகும். அதுதான் மாவடின் உயிர்!


3. மசாலா பாட்டி ஸ்டைல்: 

வெந்தயம் - வெந்தயத்தை லேசாக வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும் எடுத்து குளிரவைத்து பொடி செய்யவும்

கடுகு - கடுகை லேசாக உலர வறுத்து பொடி செய்யலாம் அல்லது நேராகவும் போடலாம்.

பாட்டி சொல்வது:

“கடுகு பொடி போட்டா சாறு கட்டி சுவை நன்றாக வரும்.”

4. கார மசாலா சேர்க்கணும்

இப்போது ஒரு பாத்திரத்தில்:

மிளகாய் தூள்

வெந்தயப் பொடி

கடுகுப் பொடி

பெருங்காயம்

இவற்றை கலந்து வைக்கவும். பிறகு இந்த மசாலாவை ஊறிய மாங்காயில் சேர்க்கவும்.


5. நல்லெண்ணெய் சேர்க்கணும்

நல்லெண்ணெயை லேசாக சூடாக்கி முழுவதும் குளிரவிடவும். பிறகு மாவடில் ஊற்றவும். 

ஏன் எண்ணெய் முக்கியம்?

ஊறுகாய் கெடாமல் இருக்கும். 

சுவை அதிகரிக்கும்

நீண்ட நாட்கள் நல்லா இருக்கும்


6. மீண்டும் ஊற வைக்கணும்

எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். மறுபடியும் ஜாடியில் போட்டு மூடி வைக்கவும். அடுத்த 5 முதல் 7 நாட்கள் தினமும் ஒரு முறை உலர்ந்த கரண்டியால் கிளறவும் அல்லது ஜாடியை குலுக்கவும்.


எப்போது சாப்பிடலாம்?


5 நாள் கழித்து சாப்பிடலாம். ஆனால் 10 நாள் கழித்து சாப்பிட்டா தான்  பாட்டி வீட்டு அசல் சுவை வரும்.


பாட்டி ஸ்டைல் மாவடின் ரகசியங்கள் :

1. கல் உப்பு தான் நல்லது. சாதாரண உப்பை விட கல் உப்பு போட்டா, சுவை நல்லா வரும். நீண்ட நாள் கெடாது

2. நல்லெண்ணெய் குறைக்காதே. கொஞ்சம் அதிகமா போட்டா தான் மாங்காய் நன்றாக ஊறும். வாசனை வரும்

3. மண் பானையில் போட்டா சூப்பர். பழைய காலத்து சுவை வரும். மெதுவா ஊறி ருசி கூடும்

4. வெயிலில் வைக்க வேண்டாம். நிழலில் வைத்தாலே போதும். அதிக வெயில் பட்டால் சுவை மாறலாம். 


பாட்டி ஸ்டைல் மாவடு எப்படி சாப்பிடணும்?

சூப்பரான கூட்டணி:

தயிர் சாதம் + மாவடு

பழைய சாதம் + வெங்காயம் + மாவடு

சாம்பார் சாதம் + மாவடு

ரசம் சாதம் + மாவடு


பாட்டி favourite:

பழைய சாதம், சிறிய வெங்காயம், ஒரு மாவடு இதுதான் கிராமத்து செம்ம காம்போ! 


மாவடு ரெடி ஆனதைக் கண்டுபிடிப்பது எப்படி?

மாங்காய் மென்மையாக இருக்கும். சாறு நிறைய இருக்கும். காரம், உப்பு, புளிப்பு சரியாக கலந்து இருக்கும். வாசனை ரொம்ப நல்லா இருக்கும். சுருக்கமாக – பாட்டி ஸ்டைல் மாங்காய் கழுவி முழுசா உலர்த்தவும். உப்பு + மஞ்சள் சேர்த்து 3 நாள் ஊறவைக்கவும். மிளகாய் தூள் + கடுகு + வெந்தயம் + பெருங்காயம் சேர்க்கவும் .நல்லெண்ணெய் ஊற்றவும் 1 வாரம் ஊறவைத்து தினமும் குலுக்கவும். தயிர் சாதத்துடன் சாப்பிடவும். 

பாட்டி ஒரு கடைசி வார்த்தை,

“மாவடு நல்லா வரணும்னா அவசரம் பண்ணக்கூடாது…

அதுக்கு பொறுமையும், கையில சுத்தமும் முக்கியம்!”

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

news

உங்க சிந்தனையை மாத்தி ஒரு தடவை ஆட்சியை என்கிட்ட கொடுத்துதான் பாருங்களேன்: சீமான் ஆவேசம்!

news

காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் அறிவிப்பு

news

Thank you People of India... ஏவுகணையில் எழுதி.. இஸ்ரேலைத் தாக்கி.. ஈரான் அதிரடி!

news

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு

news

புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டி...முடிவை அறிவித்த கிருஷ்ணசாமி

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

news

Petrol - Diesel: கூடுதல் கலால் வரியை அதிரடியாக குறைத்தது மத்திய அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்