- தேவி
குறைஞ்ச அமௌன்ட்ல சின்னதா ஒரு பிசினஸ் பண்ணனுமா, வாங்க இந்த ஐடியாவை பாக்கலாம்.
தனக்குன்னு ஒரு வருமானம் வேணும் அப்படின்னு நினைக்காத பெண்களை கிடையாது. அதுவும் வீட்ல இருக்குற பெண்களுக்கு தனக்குனு ஒரு சிறு தொழில் செய்யணும் அப்படின்ற எண்ணம் எப்போதுமே இருந்துகிட்டே இருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்கான விஷயம்தான் இது.
இதுல நம்ம என்ன பாக்க போறோம் அப்படின்னா, நம்ம வீட்டுல செய்யுற சின்ன சின்ன பொருட்களை மார்க்கெட்டிங் எப்படி பண்ணலாம், அப்படின்றத பார்க்கலாம். நான் படிக்கல நான் என்ன பண்ண முடியும், அப்படின்ற பெண்களும் இந்த மாதிரி சிறுதொழில் செய்யலாம். அதற்கு எடுத்துக்காட்டா வீட்ல நம்ம பண்ற மசால் பொடி, இட்லி பொடி.. இந்த மாதிரி ஐட்டம்ஸ்ல நம்ம சேல்ஸ் பண்ண முடியும்.
அப்படி இன்னைக்கு நம்ம பாக்கப் போற ஒன்னு தான் இட்லி பொடி. இதைப் பண்றது எப்படி.. இதுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன அப்படின்னு பார்க்கலாம். இதுக்காக மனக்கட்டு தனியா போய் கடையில் வாங்கணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது. வீட்டிலேயே இதற்கான பொருட்கள் ஆல்ரெடி இருக்கு.
தேவையான பொருட்கள்:
உளுந்து-2 மடங்கு
பொட்டுக்கடலை-1 மடங்கு
கருவேப்பில்லை ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் வத்தல்- 5
பெருங்காயம்- அரை டேபிள்ஸ்பூன்.
பொருட்கள் ரெடி.. இப்போ பொடி எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம். ஃபர்ஸ்ட் அடுப்புல வடசட்டி வச்சிட்டு அதுல உளுந்தை போட்டு லோ ஃபிளேம்ல வச்சு லைட்டா வறுக்கணும். அதுக்கு அப்புறம் பொட்டுக்கடலையும் போட்டு வறுக்க ஆரம்பிக்கணும். அதுக்கப்புறம் ஒவ்வொன்னா போட ஆரம்பிச்சிடலாம், கடைசியா பெருங்காயம் போட்டு வறுத்திடலாம். இது எல்லாம் எப்படி இருக்கனும்னா, பொன் நிறத்தில் இருக்கணும்.
வறுத்ததுக்கு அப்புறம் வீடு ஃபுல்லா அந்த ஸ்மெல் செமையா இருக்கும். இதுதான் நீங்க நல்லா வறுத்து இருக்கீங்க அப்படின்றதுக்கான ஒரு அடையாளம். கடைசியா மிக்ஸியில போட்டு அரைக்கும் போது தேவையான அளவு கொஞ்சம் கல் உப்பு போட்டு அரைச்சா இன்னும் டேஸ்டா இருக்கும். சரி இப்ப இட்லி பொடி பண்ணியாச்சு. அப்புறம் என்ன பண்ணனும்.
அதாவது ஒவ்வொரு பிராண்டுக்கும் ஒரு டேஸ்ட் இருக்கும். இந்த மாதிரி நம்மளுடைய இட்லி பொடில எப்படி டேஸ்ட்டா கொண்டு வரது அப்படின்னா பொட்டுக்கடலையை விட உளுந்து ரெண்டு மடங்கு போடணும். இதுதான் இதற்கான ஒரு டிரிக்ஸ். இப்படி பண்ணும்போது உளுந்தோட டேஸ்ட் இன்னும் அதிகமா இருக்கும். அப்ப நம்மட்ட பொருள் வாங்கறவங்களுக்கு டேஸ்ட் புடிச்சு அடுத்தடுத்து வாங்குவாங்க.
சரி இப்ப இதுக்கான அமௌன்ட் எவ்வளவு ஆகும் அப்படின்னு சொல்லும்போது, ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு 500 ரூபாய் செலவாகும், அதாவது இந்த ₹500 பொருட்கள் வாங்கறதுக்கு மட்டும் இல்லை, இத பேக் பண்ணி குடுக்குற கவருக்கான செலவும் சேர்த்துதான். முதலில் நம்ம அக்கம் பக்கத்துல இருக்குறவங்க கிட்ட இந்த மாதிரி நான் இட்லி பொடி பிசினஸ் பண்றேன் ஃபர்ஸ்ட் ஒரு பாக்கெட் வாங்கி பாருங்க டேஸ்ட் நல்லா இருந்தா அடுத்து வாங்கிக்கோங்க, அப்படின்னு சொல்லி ஆரம்பிக்கலாம்.
பக்கத்து வீடுகளில் வாங்குறவங்களுக்கு புடிச்சு போச்சுன்னா அடுத்து அவங்களே அடுத்தடுத்து கேட்க ஆரம்பிப்பாங்க. மற்றவங்களுக்கும் ரெக்கமண்ட் பண்ணுவாங்க. அடுத்த ஸ்டெப் நம்ம என்ன பண்ணனும்னா நம்ம வீட்டு பக்கத்துல எப்படியும் குறைஞ்சது ஒன்னு ரெண்டு மளிகை கடையாவது இருக்கும். அவங்க கிட்ட போயி நம்முடைய பொருளை காட்டி, அதை அங்கு விற்பனைக்கு விடலாம். இது போல சின்னச் சின்னதா இதை டெவலப் பண்ணிட்டே வரலாம். வாட்ஸ் ஆப் குரூப், டெலிகிராம் குரூப் ஆரம்பிச்சு அதன் மூலமாகவும் இதை விரிவுபடுத்தலாம். அதேபோல இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்கள் உள்ளன. அதையும் பயன்படுத்தி ஆன்லைன் சேல்ஸையும் கொண்டு வரலாம்.
ஒவ்வொரு பெண்ணுமே வீட்ல தனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கணும்னு நினைக்கிறது ரொம்ப முக்கியமான விஷயம். சின்னதா ஆரம்பிக்கிற விஷயம் தான் நாளைக்கு பெரிய லெவல்ல போய் நிக்கும். ""முயற்சிக்கு எப்பவுமே எல்லை இல்லை"" என்பதற்கு இதுபோன்ற சிறு தொழில்தான் முன் உதாரணம். நீங்களும் இந்த மாதிரி செஞ்சு வாழ்க்கையில உங்களுக்குன்னு ஒரு அங்கீகாரத்தை உருவாக்க முயற்சி பண்ணுங்க.. நிச்சயம் வெற்றி உங்களுக்கே.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}