- ஸ்வர்ணலட்சுமி
அவசரமாக வேலைக்குச் செல்பவர்கள் பேச்சிலர்ஸ் தனி குடித்தனம் இருப்பவர்கள் ஈசியாக சட்டென செய்ய ஒரு குக்கரில் சாதம் ,ஒரு கடாயில் துவையல் செய்து நல்ல ஹெல்த்தியான சுவையான அருமையான உணவு சாப்பிடலாம். என்ன சாதம் என்று கேட்கிறீர்களா அதுதான் கருப்பு கவுனி அரிசி சாதம். கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம், காலையில் சாப்பிட நல்ல ஃ பில்லிங் ஆன உணவு. வாங்க ஃபிரண்ட்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம் + பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி ஒரு கப்
பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஒரு கப்
வர மிளகாய் 3 காரம் தேவைக்கு ஏற்ப
சீரகம் ஒரு ஸ்பூன்
கருவேப்பிலை மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு
புளி சிறிதளவு
தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை:
1. கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டிய பிறகு மிக்ஸியில் நன்றாக பொடி செய்யவும்.
2. அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .ஒரு குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் கவுனி அரிசியை அப்படியே தண்ணீரோடு குக்கரில் சேர்க்கவும் . மொத்தம் மூன்று கப் தண்ணீர் குறிப்பு :எந்த கப்பில் அரிசி அளந்தோமோ அதே கப்பில் தண்ணீர் அளக்கவும் .
3. மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.
4. குக்கர் பிரஷர் அடங்கியதும் குக்கர் மூடி திறந்து கருப்பு கவுனி அரிசி சாதத்தில் உப்பு போட்டு கிளறவும்.
* பருப்பு துவையல் அரைக்க ஒரு கடாயில் துவரம் பருப்பு கடலை பருப்பு இரண்டையும் ,புளி சேர்த்து டிரையாக வறுக்கவும். பருப்பு பொன் நிறமாக மாறியதும் வரமிளகாய், சீரகம் உப்பு தேவைக்கு சேர்த்து வறுக்கவும்.
* அடுப்பை அணைத்துவிட்டு அதே சூட்டில் தேங்காய் துருவல் சேர்க்கவும் பிறகு சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் கருவேப்பிலை மல்லி தழை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
குறிப்பு: பருப்பு துவையல் அரைக்க சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்தால்தான் கெட்டியாக உருண்டை பதம் வரும்.
பயன்கள் என்ன என்று பார்ப்போமா
.jpg)
1. வெள்ளை பழுப்பு அரிசியை விட அதிக சத்துக்கள் கொண்டது கருப்பு கவுனி அரிசி .இதில் ஆழமான கருப்பு அல்லது ஊதா நிறம் அதன் உயர் ஆக்ஸிஜனேற்ற பண்புகளை குறிக்கிறது.
2. பழங்காலத்தில் இதனை 'தடை செய்யப்பட்ட அரிசி' என்றும் "எம்பரஸ் ரைஸ் "என்றும் அழைப்பார்கள்.
3. இதில் அந்தோ சயனின் என்னும் ஆண்டி ஆக்சிடென்ட் இருப்பதால் இதனை உட்கொண்டால் அதீத நன்மை பயக்கும்.
4. மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது.
5. சர்க்கரை நோய் கட்டுப்படுத்துகிறது.
6.கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மை சரி செய்யும்.
7. நரம்புகளுக்கு சிறந்தது அதிக அளவு நார்ச்சத்து நிறைந்தது.
8. கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்துகிறது.
9. உடல் எடை குறைய உதவுகிறது.
10. புற்றுநோய் தடுக்கிறது இது இயற்கை நச்சு நீக்குகிறது.
11. முடி வளர்ச்சிக்கு தேவையான பிற புரதங்களுடன் பயோடின் ,விட்டமின் பி ஆகியவற்றை வழங்குகிறது.
இத்தனை நன்மை பயக்கும் கருப்பு கவுனி அரிசி கஞ்சி சாதம் செய்து சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருக்கும். இது போன்ற அருமையான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
                                                                            தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
                                                                            கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
                                                                            அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
                                                                            சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
                                                                            கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
                                                                            'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
                                                                            ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}