- ச.சித்ராதேவி
திருநெல்வேலி: சிலருக்கு எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா என்று கேட்கத் தோன்றும்.. பலருக்கு உப்புமா தெய்வீகமாகத் தோன்றும்.. ஒவ்வொருவருக்கும் ஒரு சுவை.. ஒரு சந்தோஷம் இல்லையா..!
ஒரே மாதிரியான டிஷ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு போரடிச்சுப் போனவங்களுக்காக இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டத்துடன் வந்திருக்கோம். அதுதாங்க, கோதுமை ரவா பொங்கல்.
எப்படி பண்றதுன்னு பார்க்கலாமா.. அதுக்கு நாம கிச்சனுக்குள் போக வேண்டியது அவசியம்.. வாங்க போய்ரலாம்.
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை ரவை -500கி
நெய் 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
இஞ்சி சிறு துண்டு
வெங்காயம்
பெரிய து
ஓன்று
தேங்காய் பால் மூன்று டம்ளர்
தாளிக்க கடுகு கறிவேப்பிலை எண்ணெய் தேவைக்கு ஏற்ப
எப்படி செய்வது என்று பார்ப்போம்
1. முதலில் ஒரு கரண்டி நெய் விட்டு சம்பா கோதுமை ரவை வறுக்க வேண்டும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் மிளகாய் இஞ்சி சேர்த்து தாளித்து தேங்காய் பால் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
3. நன்றாக கொதி வந்தவுடன் இந்த ரவையை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
4. பின்னர் மீதமுள்ள நெய் ஊற்றி க் கிளறி இறக்கவும்
5. இப்போது சம்பா கோதுமை ரவை பொங்கல் ரெடி.
அடுத்து என்ன செய்யணும்.. தட்டில் போட்டு நாக்குச் சப்புக் கொட்டக் கொட்டச் சாப்பிட்டு சந்தோஷிக்கணும்.. வர்ட்டா!
(ச.சித்ரா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
{{comments.comment}}