சென்னை: லன்ச் டைம் வந்தாச்சு.. புதன்கிழமை வேற.. கமகமென்னு ஏதாவது நான்வெஜ் கண்டிப்பா இன்னிக்கு இருக்கும். அப்படியே உங்க பக்கெட் லிஸ்ட்டுல இதையும் சேர்த்துக்கங்க.. அதுதாங்க மதுரையில் ரொம்ப பேமஸான மதுரை மட்டன் வெங்காய கறி.
மதுரைன்னா சாப்பாடு, சாப்பாடுன்னு மதுரைன்னு ஆயிடுச்சு. எல்லா ஊர்லயும் எல்லா வெரைட்டியான ஃபுட் கிடைச்சாலும், சில ஊர்களில் மட்டுமே சில யூனிக்கான ஐட்டம் எல்லாம் கிடைக்கும். அப்படி நம்ம தமிழ்நாட்டில பார்த்தோம்னா, மதுரையில் ஏகப்பட்ட சாப்பாடு ஐட்டங்கள் ரொம்பவே யூனிக்கா இருக்கும்ங்க. தூங்கா நகரம்னா சும்மாவா? இரவு எத்தனை மணி ஆனாலும் சாப்பாடு சுட சுட கிடைக்கிறது எல்லாம் இங்க மட்டும்தான்.. ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும்.. சின்ன கடைகளில் கூட டேஸ்ட் சும்மா செமையா இருக்கும்.
அப்படி மதுரையில் இருக்கிற யூனிக்கான ஒரு டிஷ் தான் இன்னைக்கு உங்களுக்கு சொல்லப் போற மதுரை மட்டன் வெங்காய கறி. எல்லா ஊர்லயும் பரோட்டாவுக்கு சாப்பிட சால்னா, கிரேவின்னு தான் தருவாங்க. ஆனா மதுரையில மட்டுமே மட்டன் வெங்காய கறின்னு ஒன்னு தருவாங்க. பரோட்டா, கல் தோசைக்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். செய்றதும் ரொம்ப ஈஸிங்க.
சரிங்க, வீட்டிலேயே ஹோட்டல் டேஸ்ட்டில், மட்டன் வெங்காய கறி எப்படி செய்யலாம்னு பாப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரை கிலோ (கொத்துக்கறி)
சின்ன வெங்காயம் - அரை கிலோ
கருவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ரெண்டு ஸ்பூன்
பட்டை கிராம்பு, ஏலக்காய் - தலா மூன்று
பச்சை மிளகாய் - 4
குழம்பு மிளகாய்த்தூள் - 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் சுத்தம் செய்த மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது, குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை வேக வைக்கவும்.
பின்னர் குக்கரை திறந்து அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து எடுத்தால் மட்டன் வெங்காய கறி தயாராகிவிடும். செய்வதற்கு சுலபமான அதேசமயம் ரொம்ப டேஸ்டியான வெங்காய கறியை பேச்சுலர்ஸ் கூட சட்டுனு செஞ்சிடலாம்.
ஆனா ஒரு முக்கியமான விஷயம் மட்டன கடையில வாங்கும் போது கொத்துக்கறி மாதிரி வெட்டி வாங்கிட்டு வந்துருங்க. அப்பதான் மதுரையில செய்ற டேஸ்ட் கிடைக்கும்.
குறிப்பு: சின்ன வெங்காயம் சேர்த்தால் தான் வெங்காய கறி நன்றாக இருக்கும். பெரிய வெங்காயம் சேர்த்தால் இனிப்பு தன்மை வந்துவிடும். அப்புறம் என்னங்க உடனே கடைக்கு போய் மட்டன் கொத்துகறியை வாங்கி மதுரை ஸ்டைல் வெங்காய கறியை செஞ்சு பாருங்க. சாப்பிட்டு சந்தோஷமா இருங்க.
வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு
திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!
ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!
மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
{{comments.comment}}