- தேவி
சென்னை: சிம்பிளாக வைக்க ஒரு சிறந்த டிஷ் இந்த முட்டை தொக்கு. வாய்க்கு ருசியாகவும் இருக்கும், நல்ல நான்வெஜ் பிளேவரில் சைட் டிஷ் சாப்பிட்டது போலவும் இருக்கும்.
ஈஸியா டேஸ்டியா சிம்பிளா இந்த டிஷ்ஷைப் பண்ணலாம். இதுக்கு இரண்டு முட்டையும் பெரிய வெங்காயம் மூணும் போதும். மதுரை ஸ்டைல் முட்டை தொக்கு எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா.
தேவையான பொருள்
முட்டை -2
பெரிய வெங்காயம்-3
கரம் மசாலா பொடி
மிளகாய் பொடி
உப்பு (தேவையான அளவு)
செய்முறை

முதல்ல வெங்காயத்தை ஓரளவுக்கு பெருசாவே கட் பண்ணிக்கலாம். அப்புறம் அடுப்புல வடை சட்டி வச்சு 2 கரண்டி எண்ணெய் ஊத்தணும். இந்த டிஷ்ஷுக்கு எண்ணெய் கொஞ்சம் அதிகமா தான் தேவைப்படும். அப்பதான் டேஸ்டா இருக்கும்.
இப்ப வெங்காயத்தை அந்த எண்ணெயில் போட்டு வெங்காயத்தோட கலரு பிரவுன் கலர் வர்ற அளவுக்கு வறுக்கணும். இதுக்கு இடையிலேயே ரெண்டு முட்டைய வேக வச்சுக்கலாம். வதக்கின வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கணும்.
இப்ப அது ஒரு பேஸ்ட் மாதிரி கிடைக்கும். அதை மறுபடியும் அடுப்பை ஆன் பண்ணி வடசட்டில எண்ணெய் ஊத்தி போடணும். அதுக்கப்புறம் கொஞ்சம் கரம் மசாலா பொடி கொஞ்சம் மிளகாய் பொடி தேவையான அளவு உப்பு சேர்க்கலாம்.
லோ பிளேம்ல அடுப்பை வச்சு எண்ணெய் பிரிஞ்சு வரும் அளவுக்கு அதை வேக விடனும். அப்புறம் வேக வச்ச முட்டையை ரெண்டா நறுக்கி அதுல போடணும். பிறகு கொத்தமல்லித் தழையை பிய்த்து அப்படியே மழைச்சாரல் மாதிரி அதில் தூவி விட்டால் போதும்.. அவ்வளவுதான் முடிஞ்சது.
இந்த முட்டை தொக்கு ரொம்ப சிம்பிளா செய்ய முடியும் என்பதோடு, டேஸ்டியாவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
கனவு .. யதார்த்தம்.. ஒரு அழகிய அனுபவம்.. A fantasy with a mermaid
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
Bollywood is Back: பாலிவுட்டின் பிரம்மாண்ட எழுச்சி.. வசூல் வேட்டையில் பார்டர் 2 மற்றும் துரந்தர்!
மகாராஷ்டிரா துணை முதல்வராக சுனேத்ரா பவார் இன்று மாலை பதவியேற்பு
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
வலி இல்லாமல் வழி பிறக்காது.. Protect Yourself From Your Thoughts
நீயே என் வழித்துணை.. சிறந்த இணை.. You Are My Perfect Pair
{{comments.comment}}