- தேவி
தென்காசி, குற்றாலம் பக்கம் போனீங்கன்னா பரோட்டோ செம பேமஸ்.. விருதுநகரிலும் கூட வெளுத்துக் கட்டலாம்.. இப்படி ஊர் ஊருக்கு ஒரு சாப்பாடு பிரபலமா இருக்கும். அதே மாதிரி, இந்த மதுரை பக்கம் போய்ட்டாலே, வாயெல்லாம் அசைவ உணவுகளை ஆட்டோமேட்டிக்கா தேட ஆரம்பித்து விடும். அந்த ஊர் கொத்துப் பரோட்டா, மட்டன் சுக்கா, கோழி வறுவல்.. என ஒவ்வொரு ஐட்டமும் வேற ரகம்.. மறக்க முடியாத டேஸ்ட்டில் இருக்கும்.
அப்படிப்பட்ட சூப்பரான, சுவையில் ஒரு மட்டன் சுக்கா எப்படி டேஸ்டியா ஈஸியா பண்றதுன்னு பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள் :
மட்டன் -கால் கிலோ
பெருஞ்சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
மிளகு - ஒன்றரை ஸ்பூன்
பூண்டு -5
மிளகாய் வத்தல் -5
முதல்ல ஆட்டுக்கறியை தனியா நல்லா வேக வச்சு எடுத்து வச்சுக்கணும். எந்த அளவுக்கு வெந்து இருக்கணும்னா ஆட்டுக்கறியை தொட்டுப் பார்க்கும்போது பஞ்சு மாதிரி இருக்கணும். அப்புறம் வடை சட்டில பெருஞ்சீரகம், மிளகு பூண்டு மிளகாய் வத்தல் எல்லாத்தையும் போட்டு எண்ணெய் ஊத்தி வதக்கணும்.
அப்புறம் அத மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்துக்கலாம். இப்ப மறுபடியும் அடுப்புல வடை சட்டியை வச்சு நம்ம தனியா வேக வச்சிருந்த மட்டனை எண்ணெய் ஊத்தி வேக விடறோம்.
நம்ம அரைச்சு வச்சிருந்த பேஸ்டையும் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு அஞ்சு நிமிஷம் லோ ஃபிளேமில வச்சு வேகவிடுறோம். இதுக்கு வேற எந்த மசால் பொடியும் தேவையில்லை.
கடைசியா இறக்கிட்டு கொஞ்ச மல்லித்தழை தூவி விட்டா டேஸ்ட்டான சிம்பிளான மட்டன் சுக்கா ரெடி. அவ்வளவுதாங்க.. சாப்பிட்டுப் பாருங்க.. அவ்வளவு டேஸ்டா இருக்கும்... கூட நாலு வாய் சோறு உள்ளே இறங்கும்.
இன்னிக்கு வெள்ளிக்கிழமையாச்சே.. இன்னிக்கு எப்படின்னுதானே கேக்கறீங்களா.. இன்னிக்கு வேண்டாம்.. அதான் சண்டே வருதுல்ல.. அன்னிக்கு வச்சு அசத்திருங்க.
கும்மிருட்டில் மூழ்கிய சென்னை.. பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழையால் மக்கள் ஹேப்பி!
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.. பாக். தாக்குதலுக்கு பதறி துடித்தவர்கள் கள்ள அமைதி ஏன்?.. சீமான்
தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து.. கடலில் மூழ்கடிக்க சிங்கள அரசு திட்டம்.. டாக்டர் ராமதாஸ்
2 மாதங்களில் 5 தற்கொலை.. எப்போதுதான் ஒழியும்.. உயிர்க்கொல்லி நீட் தேர்வு?.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
High BP: உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தக்காளி கை கொடுக்கும்.. எப்படி தெரியுமா?
Liver health: உங்கள் கல்லீரலை பாதிக்கும் மூன்று உணவுகள்.. இதை தவிருங்கள் மக்களே!
ராஜஸ்தான் எல்லைப் பகுதி வழியாக.. இந்தியாவுக்குள் ஊடுறுவிய.. பாகிஸ்தான் ரேஞ்சர் அதிரடி கைது
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?