- ஸ்வர்ணலட்சுமி
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் தாராளமாக கிடைக்கும் இந்த முளைக்கீரை என்பதை தான் (Amaranth)என்று அழைப்பார்கள். இந்தக் கீரையில் தண்டுகளில் ஏகப்பட்ட சத்துகள் அடங்கியுள்ளன. கீரை பிளஸ் தண்டு சேர்த்து சமைக்க அதீத நன்மைகள் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு அதிகம் கொடுப்பது நல்லது.
முளைக்கீரை சின்ன வெங்காயம் பொரியல் செய்யத் தேவையானவை:
முளைக்கீரை ஒரு கட்டு
சின்ன வெங்காயம் 15
பூண்டு 5 பல் தட்டிக் கொள்ளவும்
வர மிளகாய் இரண்டு
தாளிக்க: நல்லெண்ணெய்- இரண்டு ஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்- ஒரு ஸ்பூன்.
உப்பு தேவைக்கு ஏற்ப
செய்முறை:
முளைக்கீரையின் வேர் பகுதி நீக்கிவிட்டு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவவும். அதனை ஒரு பிளேட்டில் மாற்றி தண்ணீர் வடிந்தவுடன் தண்டுடன் பொடி பொடியாக கட் செய்யவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு ,உளுத்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு தட்டிய பூண்டு வர மிளகாய் சேர்க்கவும். சிறிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கியது சேர்க்கவும். நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கீரையை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்டில் உள்ள தண்ணீரே கீரை வதங்க போதுமானது.
சிறிய டிப்ஸ்: கடைசியில் உப்பு போட்டால் கீரையின் பச்சை நிறம் மாறாது.
வேண்டுமெனில், பாசிப்பருப்பு வேக வைத்து அதில் சேர்த்துக் கொள்ளலாம் ,அல்லது தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த கீரை பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
முளைக் கீரையின் பயன்கள்:
தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து ,தாமிரச்சத்து, மணி சத்து நிறைந்துள்ளது. 85.7 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளன. இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.
சரும நோய்களை விரட்டும். செரிமான கோளாறுகள் போக்கும். மலச்சிக்கலை போக்கும். கண் எரிச்சலை போக்கும். இதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
பீகார் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.. நிதீஷ் குமார் தோற்பார்.. பிரஷாந்த் கிஷோர்
எல்லாமே பக்காவா செட் ஆயிருச்சு.. வட கிழக்கு பருவ மழை இன்று அல்லது நாளை தொடங்கலாம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 15, 2025... இன்று மாற்றங்களை காண போகும் ராசிகள்
தமிழகத்தில் இன்று16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
மாம்பழ விவசாயிகளின் நலனுக்காக... பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்... அம்பலமான திமுக அரசின் புளுகு: அன்புமணி காட்டம்
4 ஆண்டுகளாக அரசு முடங்கிக் கிடந்ததற்கு, இப்போது நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி: அண்ணாமலை
ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்... இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
பொண்டாட்டி இலவசம் என்று கூறுவதா.. மனிதராகவே இருக்கத் தகுதியற்ற சி.வி. சண்முகம்.. அமைச்சர் கீதா ஜீவன்
{{comments.comment}}