- ஸ்வர்ணலட்சுமி
நாட்டுக் கோழியுடன், சின்ன வெங்காயம், பெப்பர் போட்டு வறுவல் செய்து சாப்பிட்டுப் பார்த்திருக்கீங்களா.. அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும். நாலு வாய் கூட சாப்பிடுவீங்க.. வாங்க செஞ்சு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1. நாட்டுக்கோழி 1\2 கிலோ
2 .சின்ன வெங்காயம் 250 கிராம்.
3. மிளகு ஐந்து ஸ்பூன் (தேவைக்கேற்ப)
4. கறி மசாலா தூள், தனியா தூள் , மிளகாய் தூள் :-தலா ஒரு ஸ்பூன்
5. கருவேப்பிலை & மல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு.
6. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்
7. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்8. சீரகத்தூள் 1 ஸ்பூன்.
9. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
10. உப்பு, காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப
நாட்டுக்கோழி சின்ன வெங்காயம் வருவல் செய்முறை:

1. நாட்டுக்கோழியை சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக கழுவி ஒரு பிளேட்டில் வைக்கவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடி பொடியாக கட் செய்து வைத்துக் கொள்ளவும்
3. மிளகு சிறிய உரலில் நன்றாக தட்டிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியிலும் போடலாம். (உரலில் தட்டினால் தனி ருசி கொடுக்கும்)
4. கோழியை ஒரு குக்கரில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,கறி மசாலா தூள், தனியாத்தூள் சிறிது உப்பு சேர்த்து மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.
குறிப்பு: வேகவைக்கும் பொழுது இரண்டு கப் தண்ணீர் ஊற்றினால் கோழி வெந்ததும் அந்தத் தண்ணீரை வடிகட்டி சூப் செய்து குடிக்கலாம்.
5.அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போடவும். சிறிது உப்பு சேர்க்கவும் .வெங்காயம் நன்றாக வெந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
6. குக்கரில் வெந்த கோழியை அந்த தண்ணீருடனையே கடாயில் சேர்க்கவும்.
7. கோழியும் மசாலாவும் நன்றாக கலந்து வரும் . மசாலா வாசனை அருமையாக வரும். தண்ணீர் வற்றிய பிறகு இடித்து வைத்த மிளகு சேர்த்து நன்றாக கிளறவும்.
8. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப. மல்லித்தழை கட் செய்து போடவும்
9. கம கமக்கும் காரசாரமான நாட்டுக்கோழி சின்ன வெங்காயம் (பெப்பர்) மிளகு வறுவல் ரெடி.
10. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் அல்லது தக்காளி ரசம் வைத்து சூடான சாதத்துடன் இதை சைட் டிஷ் ஆக சாப்பிடலாம்.
நீங்களும் சின்ன வெங்காயம் நாட்டுக்கோழி வருவல் ட்ரை செய்து ருசித்துப் பாருங்கள். மேலும் இணைந்து தொடர்ந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
{{comments.comment}}