கடைக்கு எதுக்குப் போகணும்.. வீட்டிலேயே செய்யலாம்.. சூப்பரான சுவையான பானி பூரி!

Mar 13, 2025,12:45 PM IST

- தேவி


அம்மா.... 


சொல்லு தம்பி என்ன?


ஐயையோ ஸ்டேஷனரி ஐட்டம் வேணும்னு சொன்னா நம்புவாங்களா.... 


தம்பி நீ மைண்ட் வாய்ஸ்ன்னு நினைச்சுகிட்டு சத்தமா பேசிட்டு இருக்கே


ஐய்யய்யோ இல்லமா உண்மையிலேயே எனக்கு ஸ்டேஷனரி ஐட்டம் வேணும் கடைக்கு கூட்டிட்டு போறீங்களா?


எப்ப ஸ்கூலுக்கு கொண்டு போகணும்


நாளைக்கு கொண்டு போகணும், அதான் வேணும் 


சரி போகலாமா வா....


(கடைக்கு வந்தாச்சு)  தம்பி என்ன தேவையோ அது மட்டும் தான் வாங்கணும், தேவை இல்லாம எதையும் வாங்கக்கூடாது சரியா


சரி மா (கடைக்காரரிடம்), அண்ணா ஜாமென்ட்ரி பாக்ஸ் வேணும், கலர் பென்சில் வேணும், ஏ 4 சீட் வேணும்ண்ணா..


அவ்வளவு தானா.. சரி தம்பி போலாமா 


இல்லம்மா..  எனக்கு பானி பூரி வேணும்


ஸ்டேஷனரி ஐட்டம் வேணும் தானே கூட்டிட்டு வந்தே, இப்ப என்ன பானி பூரி கேக்குற 


பானிபூரி சாப்பிடணும் போல இருக்குது வாங்கி தரீங்களா ப்ளீஸ்


வேண்டாம் தம்பி இங்க வாங்க  வேண்டாம் நான் உனக்கு வீட்டுல செஞ்சு தரேன் 


உங்களுக்கு பானிபூரி செய்ய தெரியுமா


நல்லா தெரியும்.. நான் பண்ணி தரேன். பானிபூரி அப்பளம் மட்டும் கடையில் வாங்கிட்டு வந்து பண்ணி தரேன் ஓகேவா.


ஓகே Done!




என்னங்க.. ஆச்சரியமா இருக்கா.. இதுல என்னங்க இருக்கு.. நீங்களும் கூட வீட்டிலேயே பானி பூரி செய்யலாம்.. ஆரோக்கியமாகவும் இருக்கும், திருப்தியாவும் சாப்பிடலாம்.  எப்படி பானி பூரி பண்ணலாமன்னு பார்க்கலாம் வாங்க.


முதலில், பானிபூரிக்கு ரசம் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.


தேவையான பொருள்


கொத்தமல்லி :ஒரு கைப்பிடி அளவு 

புதினா :ஒரு கைப்பிடி அளவு 

பச்சை மிளகாய்: 2

(காரத்துக்கு ஏத்த மாதிரி)

புளி:  ஒரு நெல்லிக்காய் சைஸ்  

சீரகம் :ஒரு டேபிள் ஸ்பூன்  


செய்முறை: 




இது எல்லாத்தையும் மிக்ஸி ஜார்ல போட்டு அரைச்சு எடுத்துக்கலாம், அரைச்சு எடுத்துக்கிட்டு அந்த சக்கையையும் தண்ணீரையும் ஃபில்டர் பண்ணி தண்ணி மட்டும் எடுத்துக்கலாம். அதுல தேவையான அளவு உப்பு போட்டுக்கலாம். இப்ப பானி பூரி ரசம்  ரெடி. 


இப்ப பானி பூரிக்குள்ள வைக்கிற மசாலா ரெடி பண்ணனும். அதுக்கு என்ன பண்ணனும்னா, முதலில் பெரிய வெங்காயத்தை சின்ன சின்னதா கட் பண்ணிக்கலாம். அப்புறம் உருளைக்கிழங்கும் பட்டாணியும் வேக போட்டு, அதற்கான மசாலாவையும் ரெடி பண்ணிடலாம். 


உருளைக்கிழங்கையும் பட்டாணியையும் ரெண்டையும் ஒன்றாக மசிச்சு விட்டுகிட்டு கொஞ்சூண்டு வடை சட்டில எண்ணெய் ஊத்தி இந்த ரெண்டையும் போட்டு கொஞ்சம் உப்பு கொஞ்சம் மிளகாய் பொடி மட்டும் போட்டு பிரட்டி எடுத்து வச்சுக்கலாம். அவ்ளோதான்.


இப்போ, எல்லாத்தையும் பானி பூரியில் சேர்த்து கூடுதலா அந்த ரசத்தையும் கலந்து சாப்பிடலாம்.. சூபப்ரான பானி பூரி ரெடி.


என்ன தம்பி எப்படி இருக்குது பானி பூரி?


செம்மையா இருக்குதும்மா. ரொம்ப டேஸ்டியா இருக்குது. கடையில சாப்பிட்டோம்னா கூட இப்படி இருக்குமான்னு தெரியல. ஆனா நீங்க சூப்பரா சமைக்கிறீங்க .. ஐ லவ் யூ மா..


 ஐ லவ் யூ டா தங்க பிள்ளை!


ஸோ நீங்களும் வீட்டிலேயே செஞ்சு பாருங்க.. பிள்ளைங்களை குஷிப்படுத்துங்க!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்று திடீர் குறைவு... எவ்வளவு தெரியுமா?

news

வாழப்பாடி வெள்ளாள குண்டம் ராஜலிங்கேஸ்வர் சிவன் கோவில் நந்தியைப் பார்த்திருக்கீர்களா?

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

news

ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போகிறீர்களா.. கமல்ஹாசனே சொன்ன ஹேப்பி நியூஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்