- எஸ். சுமதி
வெறும் இட்லியே சாப்பிட்டுப் போரடிச்சிருச்சா.. கவலையே படாதீங்க.. ரவா இட்லி சாப்பிட்டுப் பாருங்க.. சூப்பரா இருக்கும். வாங்க பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ரவா - 1 டம்ளர்
தயிர் - 1/2 லி
கேரட் - 2
ப. மிளகாய் - 3
இஞ்சி சிறிய துண்டு
உப்பு தேவையான அளவு
சமையல் சோடா ஒரு சிட்டிகை
கடுகு தாளிக்க
செய்முறை :

ரவாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ப.மிளகாய் மற்றும் இஞ்சி பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய், துருவிய கேரட் சேர்த்து வதக்கி, ஆறியவுடன் வறுத்த ரவா சேர்க்கவும்.
தயிர் நன்கு நீர் ஊற்றாமல் கடைந்து எடுத்து, ரவா கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உப்பு மற்றும் சமையல் சோடா சேர்ந்து கட்டிகள் இல்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். பத்து நிமிடங்கள் மூடி வைத்துவிட்டு, இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்த்து வேக வைத்து எடுக்கவும். சுவையான ரவா இட்லி ரெடி. இதற்கு கார சட்னி பொருத்தமாக இருக்கும்.
(ச. சுமதி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் , ஶ்ரீ KGS மேல்நிலைப் பள்ளி , ஆடுதுறை , தஞ்சை மாவட்டம்)
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}