- கா. ச. ஷர்மிளா
இஸ்லாமிய வீடுகளில் ஒரு சூப்பரான ஸ்வீட் பண்ணுவாங்க.. சாப்பிட அத்தனை டேஸ்ட்டாக இருக்கும். அது என்ன தெரியுமா.. கடற்பாசி கொண்டு செய்யும் ஒரு ஜெல்லி போன்ற ஒரு இனிப்பு வகைதான் அது.
அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும் வெண்மையான மெல்லிய குச்சிகள் போன்று காணப்படும் இதற்கு கடல்பாசி என்றும் அகர் அகர் (agar agar) என்றும் ஸி கிராஸ் (sea grass) என்றும் கூறலாம்
கடற்பாசியின் பயன்கள் இது நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்கள், மற்றும் புரதம் உள்ளன. இது நம் செரிமான மண்டலத்துக்கும், இருதயஆரோக்கியத்திற்கும்,,எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.

கடல்பாசி உடலின் வெப்பத்தை சீராக்கி சமநிலையில் வைக்க உதவுகிறது . உடலின் உஷ்ணத்தை குறைக்கிறது. அல்சர் போன்ற நோய்க்கு அரு மருந்தாக செயல்படுகிறது. சரி அதை எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம் வாங்க.
செய்முறை:
முதலில் கடற்பாசியை நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதை இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறின கடற்பாசியை ஒரு பேனில் தண்ணீரை ஊற்றி கடற்பாசியை சேர்த்து மிகக் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும்போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும் பிறகுசிறிதளவுஉப்பு சேர்க்க வேண்டும் ஏனென்றால் இனிப்புக்கு உப்பு சேர்த்தால் இனிப்பை எடுத்துக்காட்டும்
கொதித்த கடற்பாசியை கரண்டியால் எடுத்து சிறிதளவு தண்ணீரில் ஊற்றும்போது தண்ணீரில் சிறிது சிறிதாக கரையும் அளவுக்கு இருக்கும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும் பிறகு கடற்பாசியை ஒரு அகன்ற தட்டில் ஊற்ற வேண்டும் அவ்வாறு ஊற்றும் போது உங்களுக்கு பிடித்த வெண்ணிலா எசன்ஸ் அல்லது பாதாம் மில்க் எசன்ஸ் அல்லது ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு தங்களுக்கு பிடித்த நட்ஸ் வகைகளை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி அதனோடு சேர்த்துக் கொள்ளலாம். அல்லது நன்றாக ஊறவைத்தும் பின்னர் சாப்பிடலாம்.
அதேபோல இன்னொரு அருமையான ரெசிப்பியும் இருக்கு.. அது கடற்பாசி பாயாசம்!
இது ஸ்வீட் என்பதை விட மிகவும் நல்ல அருமருந்து என்றே சொல்லலாம்
மேலே சொன்ன செய்முறை அப்படியே செய்து ஜெல்லி கொதிக்கும் போது நாம் அதனுடன் நன்றாக கொதிக்க வைத்த ஆறின பாலை சேர்த்து நமக்கு பிடித்த நட்ஸ் வகைகளை சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டு நெயில் வறுத்து பாயசத்திற்கு சேர்ப்பது போல் சேர்த்து சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டும் என்றால் சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சுகர் கேரையும் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பாயாசத்தை கொடுக்கலாம்.
இந்த பாயாசம் வயிற்றுப்போக்கு போகும் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் யாராக இருந்தாலும் வயிற்றுப்போக்கு அதிகமாக போகும் போது இந்த பாயாசத்தை நாம் சர்க்கரை இல்லாமல் செய்து கொடுக்க வேண்டும் சர்க்கரை இல்லாமல் செய்து கொடுக்கும் போது அந்த பாயாசம் வயிற்றுப்போக்கை நிறுத்தி விடும்.
இன்றும் இஸ்லாமிய குடும்பங்களில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் இதுதான் முதலில் மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதை ஆறுவதற்கு முன் குடிக்க வேண்டும். ஏனென்றால் இது ஆறி விட்டால் ஜெல்லி ஆக மாறிவிடும். இனிப்பு பிடிக்காதவர்கள் இந்த கடற்பாசியை ஸ்பைசியாகவும் செய்து சாப்பிடலாம்.
(கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?
TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!
பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?
Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!
அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்
திமுகவை விட 17.43 லட்சம் வாக்குகளே தவெக கூடுதலாகப் பெற்றுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 தொகுதிகளில் NDA.,வின் வெற்றியை பதம் பார்த்த சசிகலாவின் 'அஇபுதமுக'
Vijay Vs Udayanidhi Stalin: தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
{{comments.comment}}