அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!

Dec 10, 2025,03:35 PM IST

- க.பிரியா


கோயம்புத்தூர்: அரிசி மாவு பிரியர்களுக்கு இதோ அற்புதமான சிற்றுண்டி..  சூடான அக்கி ரொட்டி.


அக்கி ரொட்டி (Akki Rotti) என்பது கர்நாடகாவின் பிரபலமான ஒரு காலை உணவு. இது பச்சரிசி மாவை அடிப்படையாகக் கொண்டது. செம டேஸ்ட்டானது, ஆரோக்கியமானது் கூட. அதைச் செய்வதற்கான எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அக்கி ரொட்டி தேவையான பொருட்கள்:




அரிசி மாவு - 1 கப்

சாதம் - 1/2 கப்

வெந்நீர் - 1 1/2கப் (அல்லது மாவு பிசையத் தேவையான அளவு)

உப்பு - 1/2 தேக்கரண்டி (அல்லது சுவைக்கேற்ப)

வெங்காயம் - 1 (சிறியது, பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) (அல்லது சுவைக்கேற்ப)

கொத்தமல்லி இலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

இஞ்சி -  சிறிதளவு

எண்ணெய் - ரொட்டி சுடுவதற்கு


குறிப்பு: 1. வேக வைத்த சாதம், இஞ்சி சிறிதளவு பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். 


2.நீங்கள் கேரட் துருவல்,  அல்லது பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்தும் செய்யலாம்.


செய்முறை:


மாவு தயாரித்தல்: ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், மிக்ஸியில் அரைத்தவற்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.


பிசைதல்: இந்தக் கலவையில் சிறிது சிறிதாக வெந்நீரை ஊற்றி, ஒரு கரண்டியால் அல்லது மரக் குச்சியால் கிளறவும். மாவு சற்று ஆறியதும், சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாகப் பிசையவும். 


உருண்டைகள்: பிசைந்த மாவைச் சம அளவுள்ள உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும்.


ரொட்டி தட்டுதல்: ஒரு வாழை இலை, அல்லது பிளாஸ்டிக் ஷீட்-ல் சிறிது எண்ணெய் தடவவும். ஒரு உருண்டையை அதன் மேல் வைத்து, மெல்லிய ரொட்டியாக உங்கள் கைகளால் தட்டவும்.  ரொட்டியின் மையப் பகுதியில் சில துளைகளை இடலாம். இது ரொட்டி சீராக வேக உதவும்.


சுடுதல்: தோசைக்கல்லைச் சூடாக்கவும். தட்டி வைத்த ரொட்டியை சூடான கல்லில் போடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை அல்லது நன்கு வேகும் வரை சுடவும்.


பரிமாறுதல்: சுவையான அக்கி ரொட்டி தயார்! வெங்காய ஊறு காயுடன் சூடாகப் பரிமாறலாம்


படம் உதவி: https://vanitascorner.com/akki-roti/


(க.பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து 

நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Moconaa Falls.. எங்கடா இங்க இருந்த நீர்வீழ்ச்சியைக் காணோம்.. ஆற்றில் மறையும் அதிசயம்!!

news

எங்கே என் சொந்தம்?

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!

news

அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!

news

மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்