சென்னை: நாம் அன்றாட உணவில் சாம்பார், பொரியல், காரக்குழம்பு, பிரியாணிக்கான சைடிஷ்னு கத்திரிக்காயை விதம் விதமாக சமைத்து சாப்பிடுவோம். அந்த வரிசையில் கத்திரிக்காய் பொடி வறுவல் செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வாங்க பார்க்கலாம்.
கத்திரிக்காயில பல வெரைட்டி உள்ளதுங்க. ஒவ்வொரு ஊருக்கும் கூட சில ஸ்பெஷலான கத்திரிக்காய் வகைகளும் இருக்குங்க. வேலூரில் உள்ள முள் கத்தரிக்காய் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். ஆனா ஆனால் நம்மில் பலரும் சாம்பார் கார குழம்பு பொரியல்னு இந்த குழம்புல போட்ட கத்திரிக்காயை சாப்பிடாம வீணடிப்பாங்க. ஆனா அதையே நம்ம டிஃபரண்டா செஞ்சு கொடுத்தோம்னா விரும்பி சாப்பிடுவாங்க.
இப்ப புது ட்ரெண்டா இருக்குற பிரியாணியுடன் கத்திரிக்காய் பச்சடி வைத்து சாப்பிடுற காம்பினேஷன் பல பேருக்கு பிடிச்சு போனதால், அதிகமா விரும்பி சாப்பிடுகிறார்கள் இல்லையா? கத்தரிக்காயில் பல சத்துக்கள் உள்ளதுங்க. கத்திரிக்காயில் விட்டமின் சி மற்றும் இரும்பு சத்து ஆன்டி ஆக்ஸிடென்ஸ் போன்ற ஏகப்பட்ட நன்மைகள் நிறைஞ்சு கிடக்குங்க. இன்னைக்கு கத்திரிக்காய் வச்சு ஈஸியா, டேஸ்ட்டியா ஒரு பொடி வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பொடி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - எட்டு
தனியா - ரெண்டு டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு- ரெண்டு டேபிள் ஸ்பூன்
வெள்ளை எள்- அரை டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - ரெண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்து -1 ஸ்பூன்
புளி- நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
கருவேப்பிலை- சிறிதளவு
செய்முறை : கத்திரிக்காய் வறுவல் செய்றதுக்கு முன்னாடி, பொடி ஒன்னு ரெடி பண்ணிக்கலாம். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு வேர்க்கடலை, எள்ளு போட்டு சிம்மில் வைத்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்த இந்த மசாலாவை ஆற வச்சு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி பண்ணி வச்சுக்கோங்க.
பின்னர் கத்திரிக்காயை நீல வாக்கில் சிறு சிறு துண்டா நறுக்கி நல்லா கழுவி எடுத்து வச்சுக்கோங்க. ஒரு அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு கருவேப்பிலை தாளித்து, நறுக்கி வைத்த கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்க வேண்டும். கத்திரிக்காய் பாதி அளவு வதங்கியதும் அதில் சிறிது மஞ்சள் தூள், உப்பு ,பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர் புளியை கரைத்து திக்கான பேஸ்ட்டாக அதில் சேர்த்து கொதிக்க விடவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய் வேகும் வரை மூடி வைக்கவும். கத்திரிக்காய் நன்கு வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் பொடியை தூவி அதன்மேல் கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் பொடி வறுவல் ரெடி!
குறைந்த நேரத்திலேயே ஈஸியா இந்த கத்திரிக்காய் பொடி வறுவல் செஞ்சிரலாம்ங்க. இது டிரை ரோஸ்டா இருக்கறதனால குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்ல கட்டுற வெரைட்டி ரைஸ்க்கு சூப்பர் சைடிஷா இருக்கும். மேலும் சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதம் போன்ற சாதத்துக்கும் அட்டகாசமான டேஸ்டா இருக்கும்.. மறக்காம இதை நாளைக்கு லன்ச்சுக்கு ட்ரை பண்ணி பாருங்க!
வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு
திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!
ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!
மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
{{comments.comment}}