Cooking Tips: சுறுசுறு மீன் குழம்புக்கே டஃப் கொடுக்கும்.. Tasty மண்சட்டி பாகற்காய் குழம்பு!

Nov 13, 2024,05:43 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

சென்னை: நல்லா சுர்ருன்னு மீன் குழம்பு வச்சு சாப்ட்டா எப்படி இருக்கும்.. அச்சச்சோ நாங்க சைவம் .. அதனால என்ன அதே டேஸ்ட்டில், அட அதை விட சூப்பர் டேஸ்ட்டில் ஒரு குழம்பு இருக்கு. வச்சு சாப்பிட்டா, மீன் குழம்பே அதுக்கு முன்னாடி நிக்க முடியாது. அப்படி ஒரு குழம்பு இருக்குங்க.. வாங்க பார்க்கலாம்.

அதுதான் மண்சட்டி பாவக்காய் (பாகற்காய்) புளிக்குழம்பு. சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவுக்கு சுவையான குழம்புங்க இது. சரி செய்முறையைப் பார்ப்போமா.



தேவையான பொருட்கள்

பாகற்காய் - 2 கொட்டை நீக்கி கட் செய்யவும் 
சின்ன வெங்காயம் - 10 பொடியாக கட் செய்யவும் 
தேங்காய் துருவல் -2 ஸ்பூன் துருவல் 
சீரகம் - 1/4 ஸ்பூன் 
கறி வேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி 
வர மிளகாய் - 2 காஷ்மீரி சில்லி 
மல்லித்தூள்  -2 ஸ்பூன் 
புளி - அரை எலுமிச்சை அளவு கரைத்துக் கொள்ளவும் 
தக்காளி - 2 
நல்லெண்ணெய் - 3 ஸ்பூன் 
கடுகு, உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன் 
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் 
உப்பு புளி காரம் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப 

செய்முறை 

1. மண்சட்டி அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு சின்ன வெங்காயம் போடவும்

2. பாகற்காய் கட் செய்தது, போட்டு நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் சேர்க்கவும். 

3. மல்லித்தூள் போடவும். மிக்ஸியில் போட வேண்டியவை - தேங்காய் + சீரகம் + வரமிளகாய் + தக்காளி + கறிவேப்பிலை நைசாக அரைக்கவும்.

4. இக்கலவையை சேர்த்து  தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கொதிக்க வேண்டும். 

எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக குழம்பு கொதி வர வேண்டும். உங்களுக்குத் தேவை என்றால், சிறிது வெல்லம் சேர்க்கலாம். மீன் குழம்புக்கு டப் கொடுக்கும் பாகற்காய் மண்சட்டி புளிக்குழம்பு சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு வாரம் ஒரு முறையாவது செய்து தர வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்