பிக் பாஸ் சம்பந்திக்கே டப் கொடுக்கும் கந்த பச்சடா அதாங்க துவரம் பருப்பு பூண்டு துவையல்!

Jan 24, 2025,12:30 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இருப்பதிலேயே பெரிய குழப்பம் எது தெரியுமா.. நாளைக்கு காலையில் என்ன சமைக்கலாம், என்ன குழம்பு வைக்கலாம், என்ன சட்னி பண்ணலாம், இது வச்சா எல்லோருக்கும் பிடிக்குமா, சாப்பிடுவாங்களா.. அப்படிங்கிறதை முடிவு செய்வதுதான். அதை விட பெரிய குழப்பம் உங்களுக்கு வேறு ஏதாவது இருந்தால் அதை கமென்ட்ல சொல்லுங்க.. இப்ப உங்களுக்காக ஒரு சூப்பரான குழப்பத்துடன்.. அச்சச்சோ.. டங் ஸ்லிப்பாயிடுச்சு.. துவையலுடன் வந்திருக்கோம்.. வாங்க பார்க்கலாம்.


இட்லியோ, சாப்பாடோ எது செஞ்சாலும் அதுக்கு ஜோடியான சைட் டிஷ் அமைவதுதான் முக்கியம். அப்பத்தான் வயிறு நிறைவாகவும், மனசுக்குத் திருப்தியாவும் சாப்பிட முடியும். அதுக்காகவேதான் இந்த துவையலோடு வந்திருக்கோம். இதுக்குப் பேரு துவரம் பருப்பு பூண்டு துவையல்.


எப்படி பண்ணலாம்னு பார்க்கலாமா.. அதுக்கு முதல்ல நாம கிச்சனுக்குள் போகணும்.. வாங்க போகலாம்.




தேவையான பொருட்கள்


துவரம் பருப்பு ஒரு கப் -  நன்றாக துடைத்துக் கொள்ளவும் 

வர மிளகாய் - 4

சீரகம் - ஒரு ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

புளி - நெல்லி சைஸ்

பூண்டு - ஆறு பல்

பெருங்காயத்தூள் - அரை ஸ்பூன்

கருவேப்பிலை மல்லித்தழை - ஒரு கைப்பிடி

உப்பு காரம் - தேவைக்கு ஏற்ப சேர்க்கவும்


செய்முறை


1. கடாயில் துவரம் பருப்பு போடவும் எல்லாம் டிரையாக வறுக்க வேண்டும்

2. அதனுடன் வர மிளகாய் புளி நன்றாக வறுக்கவும்

3, பூண்டு சீரகம் போட்டு வறுக்கவும்

4, அடுப்பை ஆஃப் செய்துவிட்டு தேங்காய் துருவல் கறிவேப்பிலை, மல்லித்தழை பெருங்காயத்தூள் போடவும் அந்த சூட்டிலேயே அது வறுக்கவும்

5, உப்பு போட்டு ஆறிய பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும் மிக்ஸியை பல்ஸ் மூட்டில் வைக்கவும்

6. சூடான நல்லெண்ணெய் ஊற்றி சாதம் சூடாக இருக்கும் பொழுது சாப்பிட அருமையாக இருக்கும்

7. குழந்தைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் லஞ்ச் பாக்ஸில் இது பேக் செய்ய அருமையான புரோட்டின் ரிச் உணவு

8. சூடான கஞ்சி சாதம் வைத்து இதை சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்


துவரம் பருப்பு பயன்கள்


1. இந்திய சமையலறையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது துவரம் பருப்பு

2. புரதம் அதிகம் உள்ளது

3. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான அமைப்பு பலப்படும்

4. உடலின் கழிவுகளை நீக்கி வெளியேற்ற நார்ச்சத்து உதவுகிறது இதனால் வாந்தி வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் துவரம் பருப்பு நம்மை பாதுகாக்கிறது

5. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்