சென்னை: சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு மத்திய புலனாய்வு துறை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாகவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இருப்பினும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தும் இது போன்ற போதைப்பொருளின் புழக்கம் குறைந்தபாடில்லை.
அந்த வரிசையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சரக்கு கப்பல் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் கப்பலை சோதனையிட்டனர்.
அப்போது 250 மூட்டைகளில் 50 கிலோ குவார்ட்ஸ் பவுடரை பதித்து வைத்தது தெரிய வந்தது. அதில் 112 கிலோ சூடோ எப்ரிடின் போதைப்பொருள் பாக்கெட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூபாய் 110 கோடியாகும். மேலும் இதில் சம்பந்தப்பட்ட இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை துறைமுகத்தில் இவ்வளவு அதிக அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரைணயை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
விஜய்யை மட்டும் தொடர்ந்து குறி வைத்து விமர்சிக்கும் சீமான்... லேட்டஸ்ட் விளாசல் இதோ!
கடன் வாங்கி பால் பண்ணை அமைக்க போகிறேன்: முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
நாடு முழுவதும் பட்டாசைத் தடை பண்ணுங்க.. அது ஏன் டெல்லிக்கு மட்டும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
{{comments.comment}}