இன்னும் மீளாத தூத்துக்குடி.. இப்போது ரொம்ப முக்கியமா இந்த "குடி"... லேட்டா திறக்கலாமே?

Dec 21, 2023,07:14 PM IST

- மஞ்சுளா தேவி


தூத்துக்குடி: அடக் கொடுமையே.. ஊர் முழுக்க வெள்ளம் வந்து வீடெல்லாம் நனஞ்சு, முங்கிப் போய் கிடந்த அந்தக் கொடுமை கூட இன்னும் மனதிலிருந்து அகலாத நிலையில், இப்போது இந்த அக்கப்போரா.. பார்க்கவே பகீர் என்கிறது.


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நான்கு நாட்களாக மூடிக் கிடந்த டாஸ்மாக் மதுக் கடைகளை இன்று திறந்தனர்.. திறந்த வேகத்தில் கூடிய கூட்டம் பார்க்கவே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. (குடி)மகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாட்டில்களை வாங்கி சென்றனர்.


வரலாறு காணாத கனமழையால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது கூட நிவாரணத்தை வழங்க படகு மூலம் மீட்பு படையினர் சென்று வழங்க முடிந்தது. ஆனால் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் நிவாரணத்தை கொடுக்க  கூட வழியில்லை. இரண்டு நாள் கழித்து விமானப்படை மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள். இப்படிப்பட்ட கடும் சூழலில் பல்வேறு மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக உள்ளனர்.




குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோரப்பள்ளம் ஏரி உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடி ஊர் முழுவதையும் ஆக்கிரமித்தது. இதனால் பல்வேறு நடுத்தர மக்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. பல்வேறு பொருட்கள் நீருக்கு இறையாக்கின.  இன்னும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் பழைய நிலைமைக்கு மீண்டு வர முடியாமல் மக்கள் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


மக்கள் கடந்த நான்கு நாட்களாக வெள்ள பாதிப்பால் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி தவித்து இருந்தனர். பலர் வேலைக்குச் செல்லாமல் தங்களின் வாழ்வாதாரத்தை நினைத்து கவலை கொண்டு வருகின்றனர். வீடுகளையும், தங்கள் உடைமைகளையும் இழந்து தவித்த மக்கள் கையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர்.


முழுமையாக சோகம் தீராத நிலையில் டாஸ்மாக் கடைகளை இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள். காரணம், கடைகளில் கூடிய கூட்டத்தைப் பார்த்தபோது பகீர் என்று உள்ளது. குறிப்பாக ஏழை பெண்கள் இந்தக் கடைத் திறப்பையும், அதில் கூடிய கூட்டத்தையும் நிச்சயம் ரசிக்கவில்லை. 


இந்நிலையில் இந்த டாஸ்மாக் கடை திறப்பு தேவையா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தயவு செய்து யோசிக்க வேண்டும். வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் நிலையில் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கக் கூட டைம் கொடுக்காமல் கடைகளைத் திறந்து விட்டால், அன்றாடம் பிழைக்கும் அப்பாவி மக்களின் நிலைமை என்ன ஆகும்.. மேலும் சில நாட்கள் கழித்துக் கடைகளைத் திறந்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாகும்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்